சிரியாவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக, ராணுவ நடவடிக்கைகளில் ஜெர்மனி பங்கேற்க அனுமதி
சிரியாவில் (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கைகளில் ஜெர்மனி பங்கேற்க அந்த நாட்டு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த மாதம் நிகழ்த்திய தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு எதிராக சர்வதேச நாடுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு நட்பு நாடுகளை பிரான்ஸ் கேட்டுக் கொண்டது.
பிரான்ஸின் அந்தக் கோரிக்கையை ஏற்று, சிரியாவில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜெர்மனி அரசு சம்மதித்தது.
இந்த நிலையில், ஜெர்மனி நாடாளுமன்றம் அதற்கான அனுமதியை வெள்ளிக்கிழமை வழங்கியது. "டொர்னேடோ' உளவு விமானங்கள், போர்க் கப்பல், 1,200 வீரர்களை ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுத்த நாடாளுமன்றத்தின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment