நீரை வழங்குதல் மாத்திரமே ரவூப் ஹக்கீமுக்கு உரித்தானது - நீர்ப்பாசன, முகாமைத்துவ அமைச்சர்
நீர் சார்ந்த விடயங்களுக்கான பொறுப்பு தமது அமைச்சுக்கே உரித்தானது நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவிக்கின்றார்.
சிறுநீரக நோயை கட்டுப்படுத்துதல் மற்றும் நிலையான அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னிட்டு குருணாகல் நகரில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கலந்துகொண்டிருந்தார்.
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, ரவூப் ஹக்கீமின் அமைச்சுக்கே உரித்துடையது என அதிகளவானோர் நினைக்கின்றனர் எனினும் நீரை வழங்குதல் செய்வது மாத்திரமே அவருக்கு உரித்தானது. நிலத்தடி நீர், கங்கை ஆகியவற்றை முகாமைத்துவம் செய்தல் மற்றும் நீர் சார்ந்த விடயங்கள் நீர்ப்பாசன திணைக்களத்திற்கே உள்ளன. எனினும், இந்த விடயம் தொடர்பில் திணைக்களம் உரிய முறையில் அவதானம் செலுத்தி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. அத்துடன், எமது அமைச்சுக்கு உள்ள அதிகாரங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படவில்லை என அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

Post a Comment