Header Ads



அரசியல் வாதிகளுக்கு இனிமேல், இராணுவ பாதுகாப்பு இல்லை


பிரபுக்கள் பாதுகாப்பு கடமைகளில் இனி வரும் காலங்கிளல் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட மட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் எந்தவொரு அரசியல்வாதிக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது.

இவ்வாறான முக்கிய பிரபுக்களுக்கு பொலிஸாரினதும் விசேட அதிரடிப்படையினரதும் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

பிரபுக்கள் பாதுகாப்பு தொடர்பில் சிங்கள பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினரை சிவில் கடமைகளில் ஈடுபடுத்துவது பொருத்தமற்றது. எனவே எதிர்வரும் காலங்களில் இராணுவப் படையினர் பிரபுக்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்.

தற்போதைய ஜனாதிபதிக்கும் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினருமே பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் நபர்களுக்கான பாதுகாப்பு குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.