Header Ads



தனியாக ஓடும் நாமல்

காலையில் உடற் பயிற்சிக்காக பெரும் கும்பலுடன் ஓடிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது தனியாக ஓடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுதந்திர சதுக்கத்தில் காணப்படும் உடற்பயிற்சி ஓடு பாதையில் சாதாரண பொதுமக்களைப் போன்றே அரசியல்வாதிகளும் உடற் பயிற்சியில் ஈடுபடுவது வழமையானதாகும்.

அண்மையில் ஆளும் கட்சியின் இரண்டு அமைச்சர்கள் உடற் பயிற்சி செய்து விட்டு சற்றே ஓய்வு பெற்றுக்கொள்வதற்காக அமர்ந்திருந்தனர்.

இவ்வாறு ஓய்வு பெற்றுக்கொண்ட வேளையில் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஓடிச் செல்வதனை அவதானித்துள்ளனர்.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச என்பதனை அவர் ஓடிச் சென்றதன் பின்னரே இந்த அமைச்சர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

அதிகாரம் இருந்த காலத்தில் நாமல் ராஜபக்ச உடற் பயிற்சியில் ஈடுபடும் போது இளைஞர் யுவதிகள் மற்றும் வயோதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் இருந்தார்கள்.

அந்தக் காலத்தில் நாமல் ஓடும் நேரத்தை பார்த்து உடற் பயிற்சியில் ஈடுபட்டவர்களும் இருந்தார்கள். எனினும், இன்று நமால் தனியாகவே ஓடுகின்றார். சுற்றியிருந்த எவரும் இல்லை.

இதனைப் பார்த்த குறித்த அமைச்சர்களில் ஒருவர் இவர் மஹிந்த ஆட்சியிலும் அமைச்சுப் பதவி வகித்தவர் என கூறியுள்ளார்.

“மஹிந்த ஐயா ஆட்சியில் இருந்த காலத்தில் நமால் போன்றவர்கள் இவ்வாறு செயற்பட்டிருந்தால் இன்னமும் மஹிந்தவே ஆட்சியில் இருந்திருப்பார்”

இதனைக் கேட்ட மற்றைய அமைச்சரும் ஆமாம் என ஆமோதித்துள்ளார் என கொழும்பு வார இறுதி ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

1 comment:

  1. போலி பந்தா ஒழிந்தே போனது.

    ReplyDelete

Powered by Blogger.