மஹிந்த ராஜபக்ஷவின் ஆவி...!
நல்லாட்சி அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு யாராவது முயற்சித்தால் அவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான தீர்மானத்தை எடுக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. அரசை வீழ்த்த முயற்சிப்பவர்களுக்கு நல்லாட்சி அரசு இடம் கொடுக்காது என அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற மோசடிகள், கொலைகள் மற்றும் வெளிநாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பணம் தொடர்பான விபரங்கள் வெளியாவதால் தாம் கைதுசெய்யப்படலாம் என்ற அச்சத்தில் நாட்டில் குழப்பநிலையொன்றை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார். அவ்வாறானோரின் குழப்பும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படாது. அவற்றை முறியடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். இந்தியாவுடன் பேச்சுவார்த்தை கூட நடத்தப்படாத ஒப்பந்தத்தைப் பிடித்துக்கொண்டு இந்திய விரோத செயற்பாடுகள் மூலம் தம்மை தேசப்பற்றாளர்களாகக் காண்பிக்க சிலர் முயற்சிக்கின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளால் ஊடாக இனவாதத்தைத் தூண்டி அரசாங்கத்தைக் கவிழ்த்துவிடமுடியும் என அவர்கள் கனவு கண்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
இது குறித்து ஜனாதிபதி தலைமையில் கட்சித் தலைவர்கள் சந்திப்பொன்று நடைபெற்றது. நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் குழப்பும் முயற்சிகளை தைரியமாக எதிர்கொண்டு அவற்றை முறியடிப்பது என்றும், அவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான முடிவுகளை எடுப்பது என்றும் அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
1989ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியதைப் போன்று இந்தியாவுடன் செய்துகொள்ளப்படாதவொரு ஒப்பந்தத்தை வைத்துக்கொண்டு சிலர் நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகின்றனர். இலங்கையின் நீண்டகால நட்பு நாடான இந்தியா கடந்த யுத்த காலத்தில் இலங்கைக்கு பாரிய உதவிகளைச் செய்திருந்தது என்பதை மறந்து அவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் நாட்டின் மீது பற்றுக் கொண்டவர்கள் என்பது மட்டுமல்ல கடந்த கால சம்பவங்களைக் கொண்டு நன்கு பாடங்கற்றுக்கொண்டவர்கள். எனவே அரசாங்கத்தைக் குழப்பும் எந்த முயற்சிக்கும் இடமளிக்கப் போவதில்லை.
அதேநேரம், வடக்கிலும், தெற்கிலும் சில அடிப்படைவாதிகள் நாட்டில் ஏற்பட்டிருக்கும் அமைதியைக் குழப்பும் வகையில் செயற்பட்டு வருகின்றனர். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகளுடன் பேசி வருகின்றோம். எனினும் இதற்கு எதிராக அங்குள்ள சில அடிப்படைவாதிகள் செயற்படுகின்றனர்.
அதேபோல, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆவியைப் பிடித்துக்கொண்டு தென் பகுதியில் சிலர் இனவாதத்தைப் பரப்பி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தை குழப்புவதற்கு எவருக்கும் இடமளிக்கமாட்டோம். குழப்ப எடுக்கும் சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முறியடிக்கும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டார்.
Hon Minister, you and your govt; have done nothing so far to the MR regime wrong doers. You keep on talking, that's all!
ReplyDeleteஷரீஆ சட்டத்தில் நாட்டில் குழப்பம் விழைவிப்பவர்களுக்கு கடுமயான தண்டனை இருக்கிறது என்பது நம் ஆட்சியாளர்க்கு தெரியாது போலும்...பாவம் தெரிந்தால்... அதை கேட்டு அடம்பிடிப்பார் போலும்...
ReplyDeleteஷரீஆ சட்டத்தில் நாட்டில் குழப்பம் விழைவிப்பவர்களுக்கு கடுமயான தண்டனை இருக்கிறது என்பது நம் ஆட்சியாளர்க்கு தெரியாது போலும்...பாவம் தெரிந்தால்... அதை கேட்டு அடம்பிடிப்பார் போலும்...
ReplyDeleteUngal kauthu pohum varai solli kondu irunga
ReplyDelete