Header Ads



றிசாத் பதியுதீனின் பெயரில், நடந்த அதி பயங்கரம்...!

(www.jaffnamuslim.com இணையத்திற்காக எழுதப்பட்ட பிரத்தியேக பிரத்தியேக கட்டுரை)

 -ஜஹங்கீர்-

கடந்த திங்கள் (28.12.2015) இரவு அமைச்சர் ரிஷாட் புதியுதீனுக்கும் தேரருக்குமிடையில்; நேரடி விவாதமொன்றைத் தனியார் தொலைக் காட்சி நிறுவனமொன்று ஏற்பாடு செய்திருந்தது.

இந்த விவாதம் ஆரம்பமாவதற்கு சில மணிநேரம் இருக்கின்ற போது மலைகயத்தின் முக்கிய கிராமமொன்றில் பள்ளிவாயில் ஒலி பெருக்கியில் இப்படி ஒரு பகிரங்க அறிவிப்பை பள்ளி நிருவாகம் விடுத்திருந்தது.!

அதனை அவர்களின் வார்த்தைகளிலேயே இங்கு தருகின்றோம்!!

'இன்று அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் அன்னிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு மத குருவுக்குமிடையே விவாதம் ஒன்று நடைபெற இருக்கின்றது. இதில் முஸ்லிம்களுக்காகப் பேசுகின்ற அமைச்சர் ரிஷாட் வெற்றி பெற வேண்டும் என்பதற்கான ஒரு துவாப் பிரார்த்தனை இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெற இருக்கின்றது. எனவே ஊர் ஜமாத்தார்கள் ..  ... பள்ளியில் ஒன்று கூடுமாறு வேண்டிக் கொள்கின்றோம்' என்று அந்த அழைப்பில் சொல்லப்பட்டது.

இந்த பகிரங்க அறிவிப்புத்  தொடர்பாக நாம் பின்வரும் கேள்விகளை எழுப்புகின்றோம்!
இப்படி ஒரு ஏற்பாட்டை ஜம்மியத்துல் உலமா செய்யும்படி பள்ளி நிருவாகங்களுக்குச் சொல்லி இருந்ததா?
அல்லது பொறுப்பு வாய்ந்த உலமாக்கள் அல்லது ஏதேனும் இஸ்லாமிய அமைப்புக்கள் இப்படி ஒரு அழைப்பை விடுத்திருந்தார்களா?

அல்லது இப்படி ஒரு பிரார்த்தனையை தனக்காகப் பள்ளிகளில் பண்ணும்படி அமைச்சர் ரிஷாட் பதீயுத்தீன் நேரடியாகவோ மறைமுகமாகவோ கேட்டிருந்தாரா?
குறிப்பிட்ட பள்ளி நிருவாக சபையில் இருக்கின்ற அங்கத்தவர்கள் இந்த அறிவிப்புக்கு அங்கிகாரம் வழங்கி இருந்தார்களா? அல்லது இது பற்றி அவர்கள் ஏதும் அறிந்திருந்தார்களா?
இந்த நடவடிக்கை தொடர்பில் ஜம்மியத்துல் உலமா மற்றும் ஆலிம்கள் நிலைப்பாடு கருத்து என்ன?

குறிப்பிட்ட கிராமம் முற்று முழுதாக பெரும்பான்மை சமூகக் கிராமங்களால்  சுற்றிவளைக்கப்பட்ட ஒரு கிராமம். அத்துடன் இந்தப் பிரதேசத்திலுள்ள பல பெரும்பான்மை சகோதரர்களுக்கு முஸ்லிம் சமூகத்தினரைப்போலவே நன்றாக தமிழைப் பேசவும் விளங்கிக் கொள்ளவும் முடியும்.

எனவே இதே விதமாக தங்களது பௌத்த விகாரைகளிலுள்ள ஒலி பெருக்கிகளைப் பாவித்து பெரும்பான்மை சமூகம் சிங்கள சமூகத்துக்கு ஒரு அழைப்பை விடுத்து அந்த சமூகத்தை  விகாரைகளில் ஒன்று கூடும் படி அழைத்தால் விளைவு என்னவாக இருக்கும்? அப்போது முஸ்லிம்களின் உணர்வுகள் எப்படி இருக்கும்.? எனவே வன்முறையைத் தூண்டுவது யார்? முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டுகின்றவர்களின் கையாட்கள் பார்க்கின்ற ஒரு வேலை போல்தான் இந்த அழைப்பு இருக்கின்றது.

மூடி மறைக்க வேண்டிய விடயம்!

இந்த தகவல் மூடி மறைக்க வேண்டிய விடயம். இதனைப்போய் உலகறியப் பண்ணுவது பிழையான வேலை என்று சிலர் எமது இந்த குறிப்புக்கு மாற்றாகக் கருத்துக்களை கூறவும் நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றது? அப்படியானால் இந்த செய்தியை நாம் ஏன் சந்திக்குக் கொண்டு வருகின்றோம்?

ஆட்சி மாற்றம் நடந்து முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் ஓரளவு அடங்கிப்போய் இருந்தாலும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக அச்சுறுத்தல்கள் -சதிவேலைகள் இன்னும் முற்றும் முழுதாக ஓய்ந்து விடவில்லை என்பதனை நமது சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைக்  கட்டவிழ்த்து விடுகின்றவர்கள், பெரும்பன்மை சமூகத்தில் மிகச் சிலரே! பெரும்பான்மை சமூகத்தில் 98 சதவீதமானவர்கள் முஸ்லிம்களுடன் நல்லுறவைப் பேணுவதில் ஆர்வமாக இருக்கின்றார்கள். இந்த நிலையில் இப்படியான  அழைப்பு அவர்களின் உணர்வுகளில் நிச்சயம் மாற்றங்களை ஏற்படுத்தும்.

முஸ்லிம்கள் தரப்பில் இப்படி அழைப்பு விடுப்பவர்கள் இது பற்றி யோசித்தார்களா?

நாம் நமது சமூகத்தின் பேரால்  அழைப்பு விடுக்கின்ற போது அவர்களின் சமூகத்தின் பேரால் ஒன்று சேர்வதற்கான உரிமை அவர்களுக்கும் ஏற்படுகின்றது. அந்த நிலமையை ஏன் முஸ்லிம்கள் தரப்பில் இருந்து தோற்றுவிக்கின்றீர்கள்? என்று சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்கின்றோம்.

பள்ளி நிருவாகங்கள் இந்தக் கால கட்டங்களில் எப்படி எல்லாம்  புத்திகூர்மையாக நடந்து கொள்ள வேண்டும், பள்ளி வாயில் ஒலிவாங்கிகளை எப்படி, எதற்காக பாவிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை ஜம்மியத்துல் உலமா, வக்ப் சபை, மற்றும் இஸ்லாமிய கலாச்சார அமைச்சு பள்ளி நிருவாகங்களுக்கு அறிவுறுத்தல்களை கொடுக்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டிருக்கின்றது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம் மட்டுமே!

இது பற்றி நிறைய சொல்ல வேண்டி இருந்தாலும் நாம் எமக்குள்ளேயே சில தணிக்கைகளை பண்ணிக் கொண்டு இங்கு வார்த்தைகளை நகர்த்துகின்றோம். இப்படி ஒரு அறிவித்தல் வெளியானதும் இது பற்றி ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவரை தொடர்பு கொண்ட போது, அவர் நாட்டில் இல்லாத நிலையில், பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு நிலமையை எத்திவைத்து, அவர்கள் ஊடாக குறித்த பள்ளி நிருவாகத்துடன் தொடர்பு கொண்டு, குறித்த அறிவித்தல் மேலும் ஒலிபெருக்கியில் வராமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அத்துடன் முஸ்லிம் விவகார அமைச்சருக்கும் தகவல் சென்றடைய ஏற்பாடு  செய்யப்பட்டது.

முஸ்லிம்கள் தரப்பில் இருந்து ஏதேனும் உருவத்தில் வன்முறையை ஆரம்பிப்பதற்கு  நாம் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்து விடக்கூடாது, என்ற விடயத்தில் முஸ்லிம் அமைப்புக்கள், புத்திஜீவிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்;;. என்பதற்கு இந்த சம்பவம் ஒரு படிப்பினை!

இந்த ரிஷாட்-தேரர் விவகாரத்தில் குறிப்பட்ட பள்ளி நிருவாக அறிவிப்புத் தொடர்பில் தேடிப்பார்த்த போது நிருவாக சபை உறுப்பினர் பலருக்கு இது பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. அவர்களும் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்ப்பது தெரிந்தது.

இந்த அறிவித்தலுக்குப் பின்னணி, வருகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்க எண்ணி இருப்பவர் ஒருவர் தனது விசுவாசத்தை அரசியல்வாதிக்குக் காட்ட பார்த்த காரியம் இது என்று அங்கு பரவலான கருத்து நிலவுகின்றது. இதன் உண்மைத் தன்மையை அந்த பள்ளி நிருவாகமும் அங்குள்ள மக்களும்தான் தேடிப்பார்க்க வேண்டும். அத்துடன் ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் ஆலிம்கள், புத்தி ஜீவிகள் பள்ளி நிருவாக விடயங்களில் மிகுந்த எச்சரிக்கையாகவும் அவதானத்துடனும் இருக்க வேண்டி இருக்கின்றது.

5 comments:

  1. Anda pakka sonahan halukku arivu illati enbazu mulu naatukume therium.acju always in double game.

    ReplyDelete
  2. Enter your comment...தேசிய அரசிலில் றிசாத் பிடித்துள்ள இடம், முஸ்லிம் சமூகத்திற்கு அவர் ஆற்றும உயர் பணிகளை சகித்துக்கொள்ள முடியாத சிலர், தாம் அடைந்துள்ள வங்குரோத்தை மறைப்பதற்காக சம்பளத்திற்கு சிலரை அமர்த்தி, இணையங்களிலும், சமூகத்தளங்களிலும் விமர்சனங்களை வெளியிடுகிறார்கள். எனினும் முஸ்லிம்கள் சம்பந்தபட்டவர்களையும், அதுதொடர்பான பிரயோசனமற்ற விமர்சனங்களையும் நிராகரிப்பர

    ReplyDelete
  3. Who ever did it, it is individual or group it is one of gravest mistake. This must be thoroughly investigate by Muslim cultural affairs waqfu board and jamiathul ulama to find out who is responsible for that and take action against them. Because religious place should not used for political controversies or individual popularity. Also this area people should not allow such and dangerous irresponsible person to represent them in politically.

    ReplyDelete
  4. தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் நோண்டிவிடுவது போல் உள்ளது இந்தகட்டுரை.

    ReplyDelete
  5. Better avoiding any political propaganda in a mosque. However, requesting to make Thua for a man sacrificing his whole life for the community, is nothing wrong at all. Mosque is not only for just 5 times prayers only, but for social problems as well. This single man(Rishard) has the courage enough to stand up against the racial minded folks, while SLMC doing little.In the last 25 years,Northern Muslims have been refugees but nobody cares. What is the point having Muslim parties without winning your rights.Even middle east assistance received,these folks (racists)never allow them because of jealousiness. SLJU, Waqf Board, Muslim ministry are just names, don't do anything useful.May Allah strengthen this man- Rishard & lead him in the right path. My prayers are for him.

    ReplyDelete

Powered by Blogger.