Header Ads



அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்திலிருந்து, விலகிநிற்கும் ஊடகவியலாளர்கள்..!

-அப்துல்லாஹ் -

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் எதிர்வரும் 25ம் திகதி நடாத்தப்பட இருக்கின்ற 20வது வருட பூர்த்தி விழாவை சுமார் 25 சிரேஸ்ட அங்கத்துவ ஊடகவியலாளர்கள் புறக்கணித்து கறுப்புக் கொடி காட்டுவதற்கு தீர்மானித்துள்ளார்கள்.

சம்மேளனத்தின் தான்தோன்றித்தனம், வெளிப்படைத் தன்மை இல்லாமை, சங்க சட்டதிட்டங்கள் மீறப்படுவதைக் கண்டித்தே சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் புறக்கணிப்பில் ஈடுபட இருக்கின்றார்கள்.

சம்மேளனத்தின் பெயரை பயன்படுத்தி காலத்திற்கு காலம் விழாக்களை
நடாத்துவதாக கூறிக்கொண்டு அரசியல் வாதிகளிடமும், தனவந்தர்களிடமும்
பெருந்தொகை பணத்தினை வசூலித்தல்  வசூலிக்கப்பட்ட பணங்கள் தொடர்பாக இதுவரை எந்தவொரு வரவு, செலவு விபரங்களையும் சங்கத்தில் சமர்ப்பிக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் தற்போது சம்மேளனத்தின்  20வது ஆண்டுப் நிறைவு விழாவை காரணம் காட்டி சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹகீம்,கிழக்கு மாகான முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்,பிரதி அமைச்சர்களான எச்.எம்.எம். ஹரீஸ்,பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகான அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், கிழக்கு மாகான சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் உள்ளிட்ட அரசியல் வாதிகளிடமும், பெயர் வெளியிடப்படாத தனவந்தர்களிடமும் 50,000/- முதல் 120,000/- வரையிலான நிதி  அறவீடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. அறவீடு செய்யப்பட்ட மொத்த நிதியின் பெறுமதி சுமார் 10 இலட்சம் ரூபாய்கள் எனவும் கூறப்படுகிறது.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளன சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் இதுகுறித்து தமது பகிரங்க கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில்  கேள்வி கேட்டால்  கேள்வி கேட்கும் அங்கத்தவர்களின் பெயர் கறை படுத்தப்பட்டு  அவர்கள் சங்கத்தில் இருந்து ஓரங்கட்டப்படுவர். இதுதான் சங்கத்தின்  கடந்த கால வரலாறாகும்.

இனியும் இவ்வாறான அசிங்கங்கள் இடம்பெறக் கூடாது என்பதற்காகவே அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் சிரேஸ்ட்ட அங்கத்தவர்கள் இந்த விழாவினை புறக்கணித்து விலகி நிற்க தீர்மானித்துள்ளார்கள்.

முக்கிய குறிப்பு 

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் மீது சுமத்தப்படும் இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதில் கிடைக்குமாயின் அதனை பிரசுரிக்க ஜப்னா முஸ்லிம் இணையம் காத்திருக்கிறது.

1 comment:

  1. If this news is confirmed, how they are going to contribute to build the good governance nation? The media ministry must be conduct the investigation on it

    ReplyDelete

Powered by Blogger.