பெற்றோர்களை, குற்றம் சுமத்தும் முஜிபுர் ரஹ்மான்
எமது சமூகத்தில் உள்ள பெற்றோர்கள் பாடசாலை கல்வியை பெண் பிள்ளைகளுக்கு புகட்டுவதில் காட்டும் அக்கரையை ஆண் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்குக் கட்டுவதில்லை என குற்றம் சுமத்திய பாராளுமன்ற முஜிபுர் ரஹ்மான், இது எமது எதிர்கால சந்ததியினரையே பெரிதும் மாதிக்கும் என தெரிவித்தார்.
மத்திய கொழும்பு கல்வித்துறையில் மிகவும் பின்னிலையில் இருப்பதற்கு பெற்றோரின் பொடுபோக்கும் வீட்டுச் சூழலுமே காரணம் என்றும் குற்றம் சுமத்தினார்.
நேற்று முன்தினம் கொழும்பு 12 சென் செபஸ்டியன் தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்ற கலை விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக்கட்சி பிரதான அமைப்பாளரும் கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணை தலைவருமான முஜிபுர் ரஹ்மான் எம்.பி. அங்கு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குற்றம் சுமத்தினார்.
இந்நிகழ்வின்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,
கொழும்பு கல்வியில் மிகவும் பின்தங்கியிருக்கிறது. இது இன்று நேற்று இடம்பெற்ற சரிவல்ல. நீண்டகால கவணயீனம் காரணமாகவும் விழிப்புணர்வூட்டப்படாமையுமே இந்த பின்னடைவுக்கு காரணமாகும். இம்முறை புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி மத்திய கொழும்பில் வெறுமனே நூற்றுக்கு 4 வீமானவர்களே சித்தியடைந்துள்ளனர். கடந்த வருடங்களை ஒப்பிடுகைளில் இது பெரும் பின்னடைவாகும்.
நாம் இருக்கும் இடத்திலிருந்து 200 மீற்றர் தொலைவில்தான் சட்டக்கல்லூரி இருக்கின்றது. இதற்கமைய ஒரு வருடத்திற்கு ஒரு சட்டத்தரணியையாவது ஒருவாக்க வேண்டும். ஆனால் அவ்வாறான தயாரிப்புகள் எம்மிடத்தில் இல்லை.
நாம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் கல்விப் பின்னடைவுக்கான சில காரணங்களை இணங்கண்டிருக்கிறோம்.

முக்கியமாக கடந்த 10 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்த மஹிந்த அரசாங்கமும் அதற்கு முன்னர் 10 வருடங்கள் இருந்த சந்திரிக்கா அரசாங்கமும் மத்திய கொழும்பின் முன்னேற்றம் தொடர்பில் அக்கரை கொள்ளவில்லை. அவர்களுக்கு எம்மை பற்றி அக்கரை செலுத்துவதற்கான தேவையும் இருக்கவில்லை. அரசியல் ரீதியான பழிவாங்களாக இதை நாம் நோக்குகின்றோம். 20 வருடங்களுக்கு பின்னர் தற்போது ஐ.தே.க. பங்குபற்றுதலுடனான ஆட்சி அமைந்திருக்கிறது. இனி இப்பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
பெற்றோர்களின் செயற்பாடுகள்
எது எவ்வாறிருப்பினும் எமது சமூகத்திடத்திலும் பிழைகள் இருக்கின்றன. குறிப்பாக பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்வியில் அக்கரை செலுத்துவதில்லை. பாடசாலைக்கு சேர்த்துவிட்டார் எல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்ற என்னத்தை நீக்கிக்கொள்ளவேண்டும். ஏனெனில் பிள்ளைகள் 4 தொடக்கம் 6 மணித்தியாலங்களே பாடசாலையில் இருக்கின்றது. ஏனைய நேரங்கள் வீட்டில்தான் கழிக்கின்றன. ஆகவே பெற்றோர்களுக்குதான் அதிக பொறுப்பு இருக்கின்றது.
முதலில் வீட்டுச் சூழல் சீராக இருக்க வேண்டும். 2 பேச்சர் பரப்புக்கு இருக்கும் வீட்டினுள் 24 மணித்தியாலமும் தொலைக்காட்சி போடப்பட்டிருக்கின்றது. இதற்கு அப்பால் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு முன் சண்டையிட்டுக்கொள்கிற்னர். இவை பிள்ளைகளின் கல்வியில் பெரும் தாக்கங்களை செலுத்துகின்றது. எனவே பெற்றோர்களின் செயற்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
கலவன் பாடசாலை
கலவன் பாடசாலைகள் மூலம் சமூகத்திற்கு பெரும் ஏமாற்றம்தான் கிடைக்கின்றன. நாட்டில் முன்னணி பாடசாலைகளில் கலவன் பாடசாலைகள் இல்லை. ஆண்கள் பாடசாலை அல்லது பெண்கள் பாடசாலை மாத்திரம்தான் இருக்கின்றன. மத்திய கொழும்பில் ஹமீத் அல் ஹுஸைனியா, பாத்திமா மகளில் கல்லூரி, ஹைரிய்யா கல்லூரி என சில முஸ்லிம் அரச பாடசாலைகளே இவ்வாறு இயங்குகின்றன. ஏணைய பாடசாலைகள் கலவன் பாடசாலைகளே எனவே நாம் அடுத்த ஆண்டு முதல் பஞ்சிகாவத்தையிலுள்ள அல் ஹிதாய வித்தியாலயத்தில் பெண் பிள்ளைகளை மாத்திரம் இணைத்துக்கொள்ளவும் மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் வித்தியாலயத்தில் ஆண் பிள்ளைகளை மாத்திரம் இணைத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கிறோம்.
இதனால் பெண்கள் பாடசாலைக்கான போட்டிகளை ஓரளவு குறைத்துக்கொள்ள முடியும். ஏனெனில் பெண்பிள்ளைகளை பாடசாலையில் சேர்த்துக்கொள்வதற்கு பெரும் போட்டி நிலவுகிறது. நாள்தோரும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலையில் சேர்த்து தரும்மாறு எம்மை நாடு வருகின்றனர். இதில் 99 வீதமானவை பெண் பிள்ளைகளை பெண்கள் பாடசாலைகளில் சேர்த்துக்கொள்வதற்காகவேண்டிய கோரிக்கைகளே இருக்கின்றன. அப்படியாயின் பெண் பிள்ளைகள் மாத்திரம் படித்தால் போதுமா? ஆண் பிள்ளைகளின் கல்வியில் உங்களுக்கு அக்கரையில்லையா.
வசதி படைத்தவர்கள் ஆண்கள் பாடசாலைகளிலும் பெண்கள் பாடசாலைகளிலும் பணப்பலம் மற்றும் அரசியல் பலம் என்பவற்றை பயன்படுத்தி பிள்ளைகளை சேர்த்துக்கொள்கின்றனர். ஆனால் நடுத்தர வர்க்கத்தினரும் வசதி குறைந்தவர்களும் செய்வதறியாது பிள்ளைகளை கலவன் பாடசாலைகளில் சேர்க்கின்றனர்.
கல்வி அமைச்சரின் கவனத்திற்கு..
நான் பாராளுமன்றத்திற்கு சென்றது தோடங்களிலுள்ள மலசல் கூடங்களை சீர்செய்வதற்கோ அல்லது சீமேந்து பொதிகளை வழங்குவதற்கோ அல்ல. கொழும்பில் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தி சமூகத்தை முன்னேற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கின்றது. இந்த மாற்றம்தான் எமக்கு அவசியப்படுகின்றது.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்வதற்காகவேண்டி மத்திய கொழும்பில் 3 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பில் அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்றன. இதற்கான கோரிக்கைகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் முன்வைத்திருக்கிறேன். இந்த வேலைத்திட்டங்களை விரைவில் முன்னெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Ulagalaviya reeziyil eduththuk kondaalum , shamoogap poruppil aziga akkarayum
ReplyDeleteseyatpaadum ulagam thoanriyazu muzal aangale kavaniththu varugaraarkal .
Pirachchinaikkuriya poruppugalil pengal illaazapadiyaalum , pozuvaagave aangalai
vida pengal porumaisaligal enrapadiyaalum , pengalaal ilaguvaaga paadangalil aziga
kavanam seluththa mudigirazu enbazu oru kaaranam . Innumoru mukkiya kaarani
ennavenraal , SEEZANAK KODUMAI . Seezanakkodumayilirunthu thappuvazatku
inru penpillaigalin petroar penpillaigalukku kalviyai koduththu , nalla tholil vaayppugal
petruk kodukkiraargal , enenraal padiththa , arasaanga velaiyil irukkira pengalaye
NAMMA , ISLAMIYA BAKTHI VALINTHODUM bakthar kunjugal valai poattuth
thedi alaigiraargal. Oru kaalam cheekiram uruvaagalaam , aangalaip petravargal
seezanam koduththuthaan pengalaiththeda vendi varum . Thayaara irungal Mujbur
Rahman avargaley !