Header Ads



அல்லாஹ்வை தவிர எவனுக்கும் அஞ்சேன், இஸ்ரேலை தொடர்ந்து எதிர்ப்பேன் - முஜீபுர் ரஹ்மான்

(ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்)

மகிந்த ராஜபக்ஸவும், அவரது அதிகாரமும் இலங்கை பூராகவும் வியாப்பித்திருந்த போதே, தாம் துணிவுடன் குரல்கொடுத்து வந்ததாகவும், இந்நிலையில் பாராளுமன்றத்தில் தமக்கெதிராக எவர் செயற்பட்ட போதிலும் அவற்றுக்கு அஞ்சி ஓடும் நபர் தாம் அல்ல எனவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறனார்.

அவர் இதுதொடர்பில் மேலும் குறிப்பிடும்போது,

என்மீது பாராளுமன்றத்தில் வைத்து மேற்கொள்ப்பட்ட தாக்குதல் குறித்து சபாநாயகரிடம் முறையிட்டேன். எமது கட்சி சார்பிலும் அந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான அடாவடிச் செயற்பாடுகளை கண்டு நான் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. அல்லாஹ்வைத் தவிர வேறு எவனுக்கும் அஞ்சமாட்டேன்.

மகிந்தவுக்கு எதிராக கொழும்பில் உரத்துக் குரல்கொடுத்த நான், பாராளுமன்றத்திற்குள் சிலர் எனக்கெதிராக செயற்படுகிறார்கள் என்பதற்காக உண்மைகளை கூற தயங்கமாட்டேன்.

படுகொலை செய்யபட்ட தாஜுத்தீன் தொடர்பான குற்றவாளி பாராளுமன்றத்தில் இருப்பதாக நான் கூறினேன். அந்த வார்த்தையை மாத்திரமே அகற்றச்சொல்ல சபாநாயகர் கரு ஜெயசூரிய உத்தரவிட்டார். அதன்படி அந்தவார்த்தை அகற்றப்பட்டது. மிகவிரைவில் இதுபற்றிய பல உண்மைகள் பகிரங்கப்படுத்தப்படும். அதன்போது நாட்டுமக்கள் உண்மைகளை அறிந்துகொள்வார்கள்.

அதேவேளை தற்போது நிறுவப்பட்டுள்ள இலங்கை - பலஸ்தீன் நற்புறவுச் சங்க உறுப்பினர்களில் நானும் ஒருவன். அந்தவகையில் யூத இஸ்ரேலிய பாதகங்கள் குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருக்கிறேன். பலஸ்தீனத்திற்கு ஆதரவான, இஸ்ரேலுக:கு எதிரான எனது நிலைப்பாடு அப்படியே உள்ளது.

தற்போதை அரசாங்கத்திடம் இலங்கை முஸ்லிம்கள் இஸ்ரேல் யூத சக்திகள் குறித்து கொண்டுள்ள கவலையை எடுத்துக்கூறுவேன் எனவும் முஜீபுர் ரஹ்மான ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் மேலும் கூறினார்.

2 comments:

  1. ALHAMDULILLAH THUNIVU IRUNTHAL ALLAHVIN UZAVI KIDAIKKUM

    ReplyDelete
  2. May Allah Bless you for your speach and we expect it in action too.. But be wise in opposingn zeonist.. they are like fox

    ReplyDelete

Powered by Blogger.