வெறுப்பூட்டும் பேச்சுக்களை தடுக்கும், சட்டமூலங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்
அரசாங்கம் முன்வைத்துள்ள வெறுப்பூட்டும் பேச்சுக்களை தடுக்கும் சட்டமூலங்களுக்கு எதிராக இரண்டு மனுக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சட்டத்தின் மூலம் அரசாங்கத்தை விமர்சித்தமைக்காக ஊடகவியலாளர் ஜே எஸ் திஸ்ஸநாயகம், மற்றும் அசாத் சாலி போன்றோர் கைதுசெய்யப்பட்டமை போன்ற கைதுகள் இடம்பெற வாய்ப்புக்கள் உள்ளதாக ஒரு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை சுடர்ஒளி பத்திரிகையின் ஆசிரியர் அருண் ஆரோக்கியநாதன் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
இந்த சட்டத்திருத்தமானது, பயங்கரவாத தடைச்சட்டத்தில் உள்ள 2(1) சரத்தை பிரதிபலிக்கிறது என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
இந்த சரத்தே பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் திஸ்ஸநாயகத்தையும் அசாத சாலியையும் கைதுசெய்ய உதவியது என்பதையும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனுதாரரின் சார்பில் சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் ஆஜராகவுள்ளார்.
Post a Comment