Header Ads



பள்ளிவாசல்களில் CCTV கமரா, பொருத்­த வேண்டியதன் கட்டாயம்


கண்டி மீரா­ மக்காம் பள்­ளி­வாசல் மீதான கல் வீச்சு  தாக்­குதல் சம்­பவம் தொடர்பில்  முஸ்லிம் விவ­கார மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம். எச்.ஏ.ஹலீம் சேத­ம­டைந்­த கூரைத்­த­க­டு­க­ளுக்கு புதிய கூரைத் தக­டு­களை முஸ்லிம் சமய கலா­சார திணைக்­க­ளத்தின் ஊடாக பள்­ளி­வா­ச­லுக்கு கைய­ளிப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­துள்ளார்.

கண்டி மாந­கர சபை உறுப்­பினர் இலாஹி ஆப்தீன் கருத்து தெரி­விக்­கையில், கண்டி மீரா­மக்காம் பள்­ளி­வாசல் பல தடவை கல்­வீச்சு தாக்­கு­த­லுக்கு உட்­பட்­டது. பள்­ளி­வாசல் உண்­டியல் பல தடவை திரு­டப்­பட்­டுள்­ளது.

பள்­ளி­வா­ச­லுக்கு சி. சி. ரி.வி. கமரா பொருத்­து­மாறு நிர்­வாக சபைக்கு ஏற்­க­னவே தெரி­விக்­கப்­பட்­டும் இது­வரை அது பொருத்­தப்­ப­ட­வில்லை. இவ்­வாறு பொருத்­த­பட்டால் குற்­ற­வா­ளி­களை இனம்­கா­ண­க்கூ­டி­ய­தாக இருக்கும் என்றார்.

No comments

Powered by Blogger.