Header Ads



ஹிருனிகா மீது தொடர் குற்றச்சாட்டுக்கள் -

ஆட்கடத்தல், மற்றும் தாக்குதல் நடத்தி அச்சுறுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஹிருனிகா பிரேமசந்திரவுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளன.

கொழும்பில் நேற்று  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முசம்மில், ஹிருனிகா பிரேமசந்திரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து அரசாங்கத்தின் மீது குற்றம்சுமத்தினார்.

இதேவேளை, மேல் மாகாண சபையின் உப தலைவர் யசபால கோரலகெவும், ஹிருனிகாவின் செயற்பாடுகள் தொடர்பாக விமர்சனம் தெரிவித்துள்ளார்.

ஹிருனிகா பிரேமசந்திர எல்லா தருணங்களிலும், நாடாளுமன்ற உறுப்பினருக்கு பொருந்தாத செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஹிருனிகா யாருடைய அதிகாரத்தைக் கொண்டு இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடுகிறார் என ஜனசெத்த முன்னணியின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் கேள்வியெழுப்பினார்.

கடந்த 20 ஆம் திகதி தெமட்டகொட பகுதியில் 34 வயதான இளைஞர் ஒருவரை ஹிருனியாவின் ஆதரவாளர்கள், என கூறப்படும் சிலர் கடத்திச் சென்றதை அடுத்தே  இந்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

No comments

Powered by Blogger.