முஸ்லிம்களுக்கே அதிக சலுகைகள் வழங்கப்படுகிறது - குற்றம்சுமத்தும் பிரஜைகள் குழு
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவி முஸ்லிம் தலைமைக்கு வழங்கப்பட்டுள்ளமையானது தமிழ் மக்களுக்கு செய்யப்பட்டுள்ள பாரிய அநீதியென மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் குழு குற்றம் சுமத்தியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் குழு தலைவர் வி.கமலதாஸ் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நல்லாட்சியில் ஜனநாயகம் நிலைநாட்டப்படும் என தமிழ் மக்கள் கருதியிருந்தனர். எனினும், பல இழப்புகளையே மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், யுத்தத்தின் போது தமிழ் மக்கள் பெரும் இழப்புகளை எதிர்கொண்டுள்ளதாகவும், ஆகவே அவர்களுக்கான அபிவிருத்தியை விரைவில் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாண்மையாக தமிழர்கள் வாழ்வதாக சுட்டிக்காட்டிய பிரஜைகள் குழு தலைவர் கமலதாஸ், அதிகளவான தமிழ் உறுப்பினர்களை மக்கள் தெரிவுசெய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அவ்வாறானவர்களுக்கு மாவட்ட அபிவிருத்தி குழு பதவி வழங்கப்பட வேண்டியது கட்டாயமானது என வி.கமலதாஸ் வலியுறுத்திள்ளார்.
அத்துடன், நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு உதவிகளை நேரடியாக வழங்கியுள்ள நிலையில் அவர்கள் புறக்கணிக்கப்படுவது நியாயமற்ற செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் ஒப்பீட்டு ரீதியில் முஸ்லிம்களுக்கே அதிகளவான சலுகைகள் வழங்கப்பட்டடு வருதாகவும், இதனால் தமிழ் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் வி.கமலதாஸ் தெரிவித்துள்ளார்.
எனவே இவ்வாறான விடயங்களை கருத்திற் கொண்டு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவி தமிழ் பிரதிநிதிக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் குழு தலைவர் வி.கமலதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
First you stop the INA VERI & MATHA VERI, dont look as he is a Muslim or Hindu or Christian or Buddha....work for the people wish....only
ReplyDeleteஇந்த கமலதாஸை கொஞ்சம் மட்டக்களப்பு கச்சேரியின் பதவிநிலை அதிகாரிகள் பட்டியலைப் பார்த்து விட்டு கருத்துக் கூறச் சொல்லவூம் அல்லது அந்த பதவிநிலை அதிகாரிகளுடன் தான் எந்த இனத்தைச் சார்ந்தவன் என்று தெரியாமல் கதைக்கச் சொல்லவூம் அல்லது ஒரு கருத்திட்ட வடிவமைத்தலுக்கு அல்லது கருத்திட்ட தெரிவிடலுக்காக அந்த பதவிநிலை அதிகாரிகளைச் சந்திக்கச் சொல்லவூம் (இதயச்சுத்தியூடன்) அப்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் இல்லை போல் ஒரு உணர்வூ ஏற்படும் சும்மா இனவாதம் பேசாமல்
ReplyDeleteஇந்த கமலதாஸை கொஞ்சம் மட்டக்களப்பு கச்சேரியின் பதவிநிலை அதிகாரிகள் பட்டியலைப் பார்த்து விட்டு கருத்துக் கூறச் சொல்லவூம் அல்லது அந்த பதவிநிலை அதிகாரிகளுடன் தான் எந்த இனத்தைச் சார்ந்தவன் என்று தெரியாமல் கதைக்கச் சொல்லவூம் அல்லது ஒரு கருத்திட்ட வடிவமைத்தலுக்கு அல்லது கருத்திட்ட தெரிவிடலுக்காக அந்த பதவிநிலை அதிகாரிகளைச் சந்திக்கச் சொல்லவூம் (இதயச்சுத்தியூடன்) அப்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் இல்லை போல் ஒரு உணர்வூ ஏற்படும் சும்மா இனவாதம் பேசாமல்
ReplyDeleteHelo Mahendran, the Muslims never do any act like this...Dont talk usless words by guessing....see the real reports....
ReplyDeleteAlso, do not mix Muslim's business tallent and wealthy with their office works and its benefits
I don't know about batti but if you come kalmunai or akkaripaththu I can show you the differents in Both Tamil and Muslim area.
DeleteIm not blame muslims if Tamil ppl are majority they do same a this but understand the truth.
உண்மையாக சிங்களவர்களின் வீதம் இவர்கள் இந்த நாட்டில் இருந்தால் வேறு எந்த இனமும் வாழ முடியாது
ReplyDelete