Header Ads



நிஜமான பெண்ணைப் போன்ற, உருவத்துடன் ரோபோ (படங்கள்)

நிஜமான பெண்ணைப் போன்ற உருவத்துடன் கூடிய ரோபோ ஒன்றை உருவாக்கி சிங்கப்பூர் விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

தனியாக வசிக்கும் வயோதிபர்கள், சிறுவர்களுக்குத் துணையாக இருக்கும் வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ரோபோவைத் தயாரித்துள்ளதுடன், இதற்கு நடைன் என பெயரிட்டுள்ளனர்.

இந்த ரோபோ மனிதத் தோல் அமைப்புடன் பெண்களுக்கே உரிய அழகான கூந்தல் அலங்காரத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மற்ற ரோபோக்கள் போல் அல்லாமல், நடைன் அதற்கே உரித்தான தனித்துவ மனநிலை, உணர்ச்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

மனிதர்களுடன் உரையாடும்போது அது தனது மனநிலையை வெளிப்படுத்தும். மேலும், நல்ல ஞாபக சக்தியுடனும் அது உருவாக்கப்பட்டுள்ளது.

அப்பிள் நிறுவனத்தின் ஸ்ரீ, மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் கோர்ட்னா ஆகியவற்றிற்கு இணையான அறிவார்ந்த மென்பொருள் மூலம் நடைன் இயக்கப்படுகிறது.


No comments

Powered by Blogger.