Header Ads



வடக்கில் மீள்குடியேற்றத்துக்காக காடழிப்பதற்கு ,பசிலினால் அனுமதி வழங்கப்பட்டது - ஜனாதிபதி மைத்திரி

வடக்கில் மீள்குடியேற்றத்துக்காக காடழிப்பதற்கு கடந்த ஆட்சியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் தலைமையிலேயே அதிகாரிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக திங்கட்கிழமை (07) சபையில் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்னும் ஒருவார காலத்துக்குள் அதிகாரிகள் குழுவொன்று அங்கு அனுப்பிவைக்கப்பட்டு அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் நிலைமைகள் தொடர்பான அறிக்கை பெறப்பட்டு அதன் பின்னர் மீள்குடியேற்றம் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். 

பாராளுமன்றத்தில் நடைபெற்ற கைத்தொழில், நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவம் ஆகிய அமைச்சுகள்மீதான வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி சிறிசேன இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

1 comment:

  1. உண்மைதான் இதுதான் முன்னைய அரசின் சூழ்ச்சி அதில் ரிஸாட்டும் வசமாக மாட்டினார் என்றால் அது மிகையாகாது சூழ்ச்சி இல 01 :- 'ரிஸாட் நீங்கதானே மீழ்குடியேற்ற அமைச்சர் முஸ்லிம்களை உங்கள் சமுகத்தை பின்னர் சிறப்பாகக் கவனிக்கலாம் முதல்ல தமிழ் மக்கள குடியேத்துங்க சர்வதேச சமுகம் பாத்துக்கிட்டு இருக்கின்றது நம்மட காக்காவும் பார்த்தார் சரி நம் சமுகத்திற்கு ஆறுதலாக முறையாகச் செர்வோம் என்று' தமிழ் மக்களின் குடியேற்றம் முடிந்தபின்னர் சிங்கள மக்களையும் குடியேற்றுங்கள் காரணம் சிங்கள மக்களை குடிளேற்றாவிட்டால் அவர்கள் அரசை குறை சொல்வார்கள் அப்பவும் நீங்கதானே அமைச்சர் பாட்டு அதையும் சரிவர ஏறக்குறைய 6000 ஏக்கர் காடுகளை சிங்கள மக்களுக்கு வழங்கியும் செய்து முடித்தார் நம்ம காக்கா சரியா முடிச்சிட்டிங்களா சரி என்றார் என்னுடைய ச...... என்று வாய் திறக்க அமைச்சுப் பதவி கைமாறியது

    என்று வாய் திறக்க அமைச்சுப் பதவி கைமாறியது சரி பறவாயில்லை குணவர்த்தன நல்ல மணிதர் என்று செய்ய ஆரம்பித்தார் இனவாதிகளையும் போலி சூழலியலார்களையும் கொண்டு இனவாதத் தாக்குதல்களும் போலிச் சுற்றாடல் போராட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டன பாவம் காக்காவிற்று எத்தனை வழக்குகள் அவைகள் அனைத்திலும் முஸ்லிம்களுக்கு காணி வழங்கிதாக மாத்திரம்தான் உள்ளது சிங்கள மக்களுக்கோ தமிழ் மக்களுக்கோ வழங்கியதாக இல்லை இதுதான் ஜனனாயகத்தின் இரண்டாம் சூழ்ச்சி அடுத்தது என்ன தெரியுமா நம்ப மத்த காக்கமார் ரிஸாட் மட்டும்தான் முஸ்லிம் குடியேற்றத்தில் பெரியாளாகுவதா? அவனுக்கு என்ன நடந்தாலும் எங்கட முத்தான வாயால் அத்தாரம் பிரியாது என்று சொல்லி மௌனம் காப்பது இதுதான் மிகவும் கவலைக்குரியது

    ReplyDelete

Powered by Blogger.