Header Ads



"பாராளுமன்றத்தில் மண்­ணெண்ணை தாக்­கு­த­லுக்­குள்­ளான சாரப் ­பாம்­பு­கள்"

கடந்த கால திரு­டர்­களை விரைவில் கண்­டு­பி­டித்து  விடுவோம். இப்­போது கைவசம் 35 “பைல்கள்” உள்­ளன. இவை தொடர்பில்  விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றது என இராஜாங்க அமைச்சர்  சுஜீவ சேன­சிங்க  தெரி­வித்தார்.

டுபாய்  வங்­கியிலுள்ள 650 மில்­லியன் டொலர்கள் யாரு­டை­யது என்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. விரைவில் மேலும் பலரின் வங்கிக்  கணக்கு தக­வல்கள் வெளி­யில் ­வரும் என்றும் அவர் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று இடம்­பெற்ற வரவு செலவுத் திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 9 ஆம் நாள் விவா­தத்தில் உரை­யாற்றும் போதே வெளி­நாட்டு வர்த்­தக அமைச்சர் சுஜீவ சேன­சிங்க இவ்­வாறு தெரி­வித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில், 

திரு­டர்­களை பற்றி பேசும் போதுசபையில்   பெரும்­பா­லானோர் மண்­ணெண்ணை தாக்­கு­த­லுக்­குள்­ளான  சாரப்­பாம்­பு­களை போல் குழப்­ப­ம­டை­கின்­றார்கள். 

ஏன் என்­பது அவர்­க­ளது மனச்­சாட்­சிக்­குத்தான் தெரியும்.  விரைவில் திரு­டர்கள் பிடிக்­கப்­ப­டு­வார்கள். ஆனால் சிறிது கால தாம­த­மாகும்.  ஏனென்றால் அனைத்து திருட்­டுக்­களும் சர்­வ­தேசத் தரத்­தி­லா­னவை.

எனவே அவ்­வா­றான திருட்­டு­க­ளுக்கு தண்­ட­னைகள் இல்லை. எனவே புதிய சட்­டங்கள் தற்­போது உரு­வாக்­கப்­பட்டு வரு­கி­றது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் இணைந்து இணக்­கப்­பாட்டு அரசை ஏற்­ப­டுத்தி நாட்டின் எதிர்கால அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு புதிய மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிகளை முன்னெடுக்கின்றனர் என்றார்.

1 comment:

  1. Empty files care full may b m3's also so losses how get nat'l list mp.

    ReplyDelete

Powered by Blogger.