கபீர் காசிம் நிதியமைச்சராகிறார், ஹக்கீமின் அமைச்சும் கைமாறுகிறது..? சிங்கள ஊடகம் தகவல்
நிதி அமைச்சுப் பொறுப்பு கபிர் ஹாசிமிற்கு வழங்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட உள்ள அமைச்சரவை மாற்றத்தில் இவ்வாறு நிதி அமைச்சுப் பொறுப்பு ஹாசிமிடம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நிதி அமைச்சராக கடமையாற்றி வரும் கருணாநாயக்கவிற்கு வர்த்தக அல்லது நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சுப் பதவி வழங்கப்படம் என குறிப்பிடப்படுகிறது.
பத்து அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு வேறும் அமைச்சுப் பதவி வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment