வஸிம் தாஜூதீன் கெலை, மகிந்தவின் குடும்ப சாரதி கைது..?
முன்னாள் றக்பி வீரர் வாஸிம் தாஜூதீனின் மரணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்படவுள்ளார்.
சீசீடிவி கமரா மூலம் அடையாளம் காணப்பட்ட அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தாஜூதீன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சீசீடிவி கமராவின் படங்கள் கிடைத்துள்ளன.
இவை தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் மஹிந்த ராஜபக்சவின் சாரதியாக இருந்த இராணுவ வீரர் உட்பட இதன் பின்னர் பலர் இந்த மரணம் தொடர்பில் கைது செய்யப்படவுள்ளனர்.
குறித்த சாரதி தற்போது திருகோணமலை இராணுவ முகாமில் கடமையாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல றகர் விளையாட்டு வீரர் வசிம் தாஜூடீன் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் எதிர்வரும் 19ம் திகதிக்கு பின்னர் கைது செய்யப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் வரவு செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனையடுத்தே தாஜூடீன் கொலையுடன் தொடர்புடைய சகல நபர்களுக்கு கைது செய்யப்பட உள்ளதாக தெரியவருகிறது.
வசிம் தாஜூடீன் 2012ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி இரவு கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, அவரது காருக்குள் போட்டு அந்த காரை நாராஹேன்பிட்டி சாலிகா விளையாட்டு மைதானத்தின் மதில் சுவரில் மோத செய்து, காருக்கு தீவைத்து,கொலை செய்துள்ளதாக ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான பாதுகாப்பு கெமராக்களில் பதிவான சகல காட்சிகளும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் உள்ளன.
ராஜபக்ச குடும்ப சாரதியான திஸ்ஸ என்பரே இந்த கொலை செய்துள்ளதாக குறித்த பாதுகாப்பு கெமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளது.
திஸ்ஸ என்ற இந்த சாரதி, தாஜூடீனை ரி.56 ரக துப்பாக்கியில் தாக்குவது பாதுகாப்பு கெமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
தாக்கப்பட்ட தாஜூடீன் மார்பை பிடித்து கொண்டு கீழே விழுவது, அப்போது அவர் அருகில் இருந்து விலகிச் செல்லும் திஸ்ஸவின் கையில் இரத்தம் படிந்த ரம்போ ரக கத்தி இருப்பதையும் தெளிவாக காணக் கூடியதாக உள்ளதாக தெரியவருகிறது.
மேலும் இந்த கொலைக்கு உதவியவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் அனைவரும் ராஜபக்ச குடுபத்தினருடன் நெருக்கமாக இருக்கும் நபர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனை கிடைத்த பின்னர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் அடுத்த நடவடிக்கையை எடுக்க தயாரான நிலையில் உள்ளதாக காவற்துறை தலைமையக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ithayethan appaila irundu solraangal innam orutharayum kaidhu seidadaha innam ariyawillai. ithatku pinnal nam thatpodaya arasiyalil ulla mukkiya amaippalar oruwar iruppadu mattum urudi, en endral munnaal janadipadi adikkadi anda mukkiya amaipplarai sandithu pechu nadathuhindrar. adatku pinnarthan wisaranaiyalarhaluku alutham kodukkappaduhindradu enbadu unmai, unmai eppodawadu weliye warum
ReplyDeleteNo need permission from President & Prime minister. If it is pure good governance government, the judicial sector can do its work without any intervention
ReplyDelete