Header Ads



இன, மத குரோத உணர்வைத் தூண்டுபவருக்கு எதிரான சட்டம் - பொதுபல சேனா கடுமையாக எதிர்ப்பு

குற்றவியல் சட்டம் திருத்தப்படுவதற்கு பொதுபல சேனா அமைப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. குரோத உணர்வைகத் தூண்டக் கூடிய பேச்சுக்கள் கருத்துக்களை வெளியிடுவோரை குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டால் அது நாட்டுக்கும் மக்களுக்கும் பாதகமாக அமையும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். மக்கள், அரசியல்வாதிகள், தேசிய அமைப்புக்கள் போன்றவற்றை அடக்குமுறைக்கு உட்படுத்த இந்த சட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

சட்டத்திருத்தங்கள் தொடர்பில் நவம்பர் மாதம் 6ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்படுவதனை எதிர்ப்பதற்கான உரிமை தம்மிடம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இனவாத, மதவாத அடிப்படையில் குரோத உணர்வைத் தூண்டும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில் சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் இதனை மக்களுக்கு எதிரான அடக்குமுறையாகவே கருதப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டால் ஒவ்வொரு பாடசாலையும் சிறைச்சாலையாக மற்றமடைந்து விடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத மாற்றத்தை தடுக்கும் வகையிலான சட்டமொன்றை அமுல்படுத்துமாறு தாம் கோருவதாகத் தெரிவித்துள்ளார்

1 comment:

  1. Let Him go to JUNGLE with his followers and get freedom of talking hate, racism, terrorism, killing , tagarism .. what ever he wants. BUT his freedom does not apply to a sate which look for peace and harmony.

    ReplyDelete

Powered by Blogger.