Header Ads



முஸ்லிம் சமூகத்தின் கல்வி எழுச்சிக்காக என்னை அர்ப்பணிப்பேன் - றிசாத் சூளுரை

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்வி எழுச்சிக்காக தன்னை முழு அளவில் அர்ப்பணித்துச் செயற்பட உறுதி பூண்டுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

இதுகுறித்து அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் கூறுகையில்..!

இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சி குறித்து வரும் எந்த தகவல்களும் திருப்பதிகரமாக இல்லை. குறிப்பாக இலங்கையின் தலைநகரம் கொழும்பு முஸ்லிம்களின் கல்வியானது கவலை தரும்படியாக உள்ளது. இதற்கு சகலரும் பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளோம்.

கொழும்பு மாவட்ட உலமாக்கள், துறைசார் நிபுணர்களுடன் இதுபற்றி கலந்துபேசினேன். குறிப்பாக கொழும்பு மாவட்ட முஸ்லிம் எம்.பி.க்களுடன் கதைத்தேன். எல்லோரும் முஸ்லிம் சமூகம் கல்வியில் எழுச்சி பெற வேண்மென்ற சாதகமான சிந்தனையில் உள்ளனர்.

அந்தவகையில் அரசியல், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்வி எழுச்சிக்காக என்னை முழு அளவில் அர்ப்பணிக்க தீர்மானித்துள்ளேன். என்னிடம் இறைவன் வழங்கியுள்ள அத்தனை வளங்களையும் இதற்காக பயன்படுத்துவேன்.

அந்தவகையில் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மேற்கொண்ட சந்திப்பு முக்கியமானது. இதுபோன்று இன்னும் பல விடயங்களை முன்கொண்டு செல்லவுள்ளோம்.

பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர்கள் வெளியேறுவது முக்கியமல்ல. அவர்களை சமூகத்திற்கு பயனுள்ள, ஆளுமை மிக்கவர்களாக தயார்செய்ய வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது.

இலங்கை முஸ்லிம் சமூகமானது தலைநிமிர்ந்து நிற்பதற்கு கல்வியே பிரதானமானது. இதற்காக எல்லா தரப்புகளுடன் சகலவித பேதங்களையும் மறந்து கைகோர்த்து செயற்பட தயாராகவுள்ளேன் எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் கூறினார்.

3 comments:

  1. good attempt, May Allah a Bless u

    ReplyDelete
  2. Good effort mr.rishad...I am represents kegalle district.there is cabinet minister . Unfortunately nothing happening for us. We need more like you people.

    ReplyDelete
  3. நாம் அரசியலுக்காகக் கூறவில்லை உள்ள அரசியல் வாதிகளுக்கும் ஓரளவுக்கோனும் சமுகத்தில் அக்கலை கொண்ட மணிதன் இவர் அவரின் நல்ல எண்ணங்களை அல்லாh மேலும் வலுவூட்டுவானாக

    ReplyDelete

Powered by Blogger.