றிசாத் பதியுதீனை, அரசாங்கம் கைவிட்டுவிட்டது
மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் பலம் பொருந்திய அமைச்சராகவும், பசில் ராஜபக்ஸவின் செல்லப் பிளையாகவும் விளங்கிய றிசாத் பதியுதீனை தற்போதைய அரசாங்கம் கைவிட்டுள்ளதாக குருநாகல் மாவட்ட சுதந்திரக் கட்சியின் பிரமுகரும், மகிந்த அணியின் ஆதரவாளருமான சத்தார் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் தெரிவித்ததாவது,
ஒவ்வொரு அரசாங்கத்திற்கு அமைச்சரவை கூட்டுப்பொறுப்பு முக்கியமானது. அந்தவைகயில் மகிந்த அரசாங்கத்தில் இந்த அமைச்சரவை கூட்டுப்பொறுப்பு சிறந்த நிலையில் காணப்பட்டது. தற்போது அந்த நிலை குறைவடைந்துள்ளது.
றிசாத் பதியுதீன் தனி ஒருவராக நின்று போராடுகிறார். அவருக்கு ஆதரவாக அவருடைய அமைச்சரவையிவ் உள்ள சக அமைச்சர்களே வாய் திறக்கிறார்கள் இல்லை. மைத்திரி - ரணில் அரசாங்கமானது அவரை கைவிட்டுவிட்டது.
மகிந்தவின் அரசாங்கத்தில் றிசாத் பதியுதீன் செல்லப்பிள்ளையாக இருந்தார். அரசாங்கத்திலிருந்து வெளியேறிய முதலாவது முஸ்லிம் அமைச்சரும் அவரே. இப்படிப்பட்ட நிலையில் றிசாத் பதியுதீனை இந்த அரசாங்கம் கைவிட்டுள்ளது.
1990 இல் வடக்கு முஸ்லிம்க்ள புலிகளினால் விரட்டப்பட்டபோது அவர்களின் காணி உறுதிகளையும்; புலிகள் கைபற்றியிருந்தனர். அவர்களுக்குரிய வாழ்விடங்கள் காடுகளாக மாறியது. இந்நிலையில் விசேட ஏற்பாடுகள், நடமாடும் சேவைகள் மூலம் அந்த மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கபட்டன. அந்த மக்கள் அவர்களின் சொந்த இடங்களிலேயே குடியேறினர்.
எனினும் இன்று இனவாத நோக்குடன் வடக்கு முஸ்லிம்களுக்கு எதிராகவும், அமைச்சர் றிசாத்திற்கு எதிராக செயற்பாடுகள் நடைபெறுகின்றன. மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் வடக:கு முஸ்லிம்கள் தமது காணிகளை தாம் துப்பரவு செய்துகொண்டு குடியேறிய போது எவரும் சட்டவிரோத குடியேற்றம் எனக்கூறிவ்லலை.
தற்போது அப்போது கூறுவதும், அதுகுறித்து அரசாங்கம் மௌனம் காத்து நிற்பதும் வெளிப்படையான இனவாத சம்பவங்களே ஆகும்.
நான் மகிந்த ஆதரவு அணியிலிருந்தாலும் வடக்கு முஸ்லிம்களின் நலனுக்காகவும், அந்த முஸ்லிம்களின் நலுனுக்காக பாடுபடும் றிசாத் போன்றவர்களுக்கு ஒத்துபை;பு நல்க தயாரெனவும் சத்தார் இதன்போது தெரிவித்தார்.
no need any bodies help allah will help him we are with him
ReplyDeleteநீங்கள் மஹிந்த அணியாக இருந்தாலும், ஒரு வேளை உங்கள் சுயநலத்திற்கே பேசினாலும் கூட, மிகப்பெரிய உண்மை அதுதான்!
ReplyDeleteமஹிந்தவை தூக்கி எறிந்து விட்டு, மைத்திரியையும், ரணிலையும் ரிசாத் ஆதரித்தாலும், அவரது வெளியேற்றத்தின் பின்பே மஹிந்த உண்மையான ஆட்டம் கண்டாலும், அதனாலேயே மைத்திரி-ரணில் கூட்டு ஆட்சி அமைத்தாலும்... ரிசாத்தில் ஒரு கண்வைத்தே இந்த கூட்டு இதுவரை செயற்படுகிறது! ரிசாத்திற்கு ஆப்பு வைப்பதற்கு (முஸ்லிம் காங்கிரஸ்போல், மஹிந்தபோல்) தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறது என்றுகூட சொல்லலாம்!
அதுமாத்திரமல்ல, "முஸ்லிம்கள்மீதும் இந்த "நன்றியுள்ள" கூட்டு இதுவரை உண்மையான எந்தவித ஆக்கபூர்வ நன்மைகளும் இதுவரை செய்யவில்லை, செய்யப்போவதாகவுமில்லை" என்பதே இவர்களின் உண்மையான முகமாகும்.
@ Jasmin66 and Jamal சரியாகச்சொன்னீர்கள். அவர்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள் என்று தெரிந்த பின்னும் முஸ்லிம்களாகிய நாம் நமது கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட முயற்சிக்க வேண்டும்.
ReplyDeleteஇஸ்லாம் , இறைநேசர் என்று தங்களை பிரகடனப்படுத்திக்கொள்ளும் ஒவ்வொரு jamath தலைவர்களும் தங்களது ego களை மறந்து தங்களுக்குள் கலந்தாலோசித்து முஸ்லிம் சமூகத்தை ஒன்றுபடச்செய்ய வேண்டும். தற்போதைய சூழலில் அது அவர்களின் கடமை.