வசீம் தாஜுதீன் படுகொலை - நீதிபதி நிஹால் பீரிசிற்கு கடுமையான அழுத்தங்கள்
பிரபல றக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மர்ம மரணம் தொடர்பான வழக்கின் முக்கிய தீர்ப்பொன்று இன்று (10) வழங்கப்படவுள்ளது.
வசீம் தாஜுதீனின் மரணம் திட்டமிட்ட படுகொலை என்றும், அது தொடர்பான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கடந்த வாரம் அறிவித்திருந்தார்கள். நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் பட்சத்தில் கொலையாளிகளை ஒரு வாரத்துக்குள் கைது செய்யத் தயாராக இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.
இதற்கிடையே இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி நிஹால் பீரிசிற்கு கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது.
குறித்த மரணம் கொலை என்று தீர்ப்பு அளிக்கக் கூடாது என்று அவர் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அத்துடன் இன்று வழங்கவிருந்த தீர்ப்பை ஒத்திவைக்குமாறும் அவருக்கு நெருக்குதல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்ட முக்கியஸ்தர்களின் ஆலோசனைகளை புறம் தள்ளி நடந்து கொள்வதன் காரணமாக, நீதிபதி நிஹால் பீரிஸ் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் மாத்தறை நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளார்.
Post a Comment