ஜேர்மனியில் நடுவீதியில் ராக்கெட் ஆயுதத்துடன், நடைபெற்ற பயங்கரம்
ஜேர்மனி நாட்டில் வங்கி பணத்தை பாதுகாப்பாக ஏற்றிச்சென்ற வாகனத்தை முகமூடி அணிந்த மர்ம கும்பல் ஒன்று ராக்கெட் ஆயுதம் காட்டி பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியில் உள்ள Dortmund என்ற நகரில் தான் இந்த துணிகர கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை மாலை 7 மணியளவில், லட்சக்கணக்கான யூரோ அடங்கிய பெட்டியை ஏற்றிக்கொண்டு பலத்த பாதுகாப்பு செய்யப்பட்ட வாகனம் ஒன்று புறப்பட்டுள்ளது.
வாகனம் புறப்பட்ட சில நிமிடங்களில், வாகனத்திற்கு எதிராக திடீரென கார் ஒன்று வழி மறித்துள்ளது. இதே சமயம், பணம் வைக்கப்பட்டுள்ள வாகனம் பின்னால் சென்றுவிடக்கூடாது பின, பின்பக்கத்திலும் மற்றொரு கார் வந்து நின்றுள்ளது.
மையத்தில் சிக்கொண்டு வாகனம் நகர முடியாமல் இருந்த நிலையில், முன்னால் நின்ற காரில் இருந்து சுமார் 4 பேர் முகமூடி அணிந்து கத்திக்கொண்டு இறங்கியுள்ளனர்.
பின்னர், தோள் பட்டையில் வைத்து செலுத்தப்படும் ராக்கெட் ஆயுதத்தை காட்டி வாகன ஓட்டுனர்களை மிரட்டியுள்ளனர்.
மற்றொரு நபர் வாகனத்தை நோக்கி தானியங்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.
இந்நிலையில், பின்னால் நின்ற காரில் இருந்த இறங்கிய மற்றொரு முகமூடி அணிந்திருந்த கொள்ளையன், வாகனத்தை துளைக்கும் கருவையை பயன்படுத்தி பின்புறம் வழியாக சென்று பணத்தை அள்ளி மூட்டை கட்டியுள்ளான்.
கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு பிறகு, கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். எனினும், வாகனத்தில் பயணம் செய்த நபர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்ட பொலிஸ் அதிகாரியான Cornelia Weigandt, கொள்ளையர்களுக்கு ராக்கெட் ஆயுதம் எவ்வாறு கிடைத்தது, பணம் வாகனம் குறித்து அவர்களுக்கு யார் தகவல் கொடுத்தது உள்ளிட்ட சந்தேகங்களுடன் கொள்ளையர்களை தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.
எனினும், கொள்ளையர்கள் எவ்வளவு பணத்தை கொள்ளையடித்து சென்றனர் என்ற தகவலை பொலிசார் வெளியிடவில்லை.
Post a Comment