Header Ads



வரவு செலவுத்திட்ட யோசனை அரசாங்கத்தை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது - மைத்திரி ஒப்புதல்

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலக வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. வரவு செலவுத்திட்ட யோசனை அரசாங்கத்தை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஒப்புக்கொண்டுள்ளார் சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மையில் வரவு செலவுத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்த போது, இந்த விடயத்தை ஜனாதிபதி தம்மிடம் கூறியதாக சங்கத்தின் பேச்சாளர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் கார்களுக்கு வரி அதிகரித்தமை, புகைச் சான்று பத்திரம் பெற்றுக்கொள்ளும் கட்டணத்தை அதிகரித்தல் போன்ற பல்வேறு விடயங்களில் வரவு செலவுத்திட்டம் விமர்சனங்களைச் சந்தித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தில் பாரியளவில் பிழைகள் காணப்படுவதாதகவும் அமைச்சுப் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்ற ரீதியில் ரவி கருணாநாயக்க தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. well said. we just need to get a right person to the right change.

    ReplyDelete

Powered by Blogger.