Header Ads



புதிய நிவாரணங்களை அறிவித்தார் பிரதமர் ரணில் (விபரம் இணைப்பு)

அரச பணியாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் 2 ஆயிரம் ரூபா எதிர்வரும் ஜனவரி மாதம் அவர்களின் அடிப்படை வேதனத்தில் சேர்க்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஓய்வூதியம் ரத்து செய்யப்பட மாட்டாது .

அதற்கு பதிலாக நிதியொதுக்கத்துடனான ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய விசேட உரையிலேயே இந்த விடயங்களை வெளியிட்டார்.

அத்துடன் வாகனங்களின் வருமான வரி பத்திர கட்டணம் 25 வீதத்தில்  இருந்து 15 வீதமாக குறைக்கப்படும்.

வாகனங்களின் புகைப்பரிசோதனை கட்டணம் இடைக்கால கட்டணமாக 5000 ரூபாவில் இருந்து 1500 ரூபாவாக குறைக்கப்படும்.

வாகன குத்தகை மதிப்பீட்டு கட்டணம் சிற்றூந்துகளுக்கு 5000 ரூபாவும் முச்சக்கர வண்டிகள் மற்றும் உந்துருளிகளுக்கு 3000 ரூபாவும் அறிவிடப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

அத்துடன்,தனியார் ஊழியர்களுக்கான இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வேதன அதிகரிப்பு எதிர்வரும் மே மாதத்திற்கிடையில் வழங்க முடியும் என பிரதமர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.