காத்தான்குடியில் "இரத்ததானம் வழங்குவோர்களின் சமூகம்" உதயம்
-Dr. A.L. A. Shiyam-
இரத்ததானம் வழங்குவதில் கிழக்கு மாகாணத்திலே முன்னணியில் திகழும் ஊர் காத்தான்குடி. இது அதிகமான இரத்ததானம் வழங்குவோரும் அதனை ஒழுங்குபடுத்தும் அமைப்புகளையும் கொண்ட ஊராகும் .
காத்தான்குடியில் இருந்து 1500க்கும் அதிகமானோர் வருடாவருடம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இரத்ததானம் செய்துவருகின்றனர். இது இவ்வைத்தியசாலைக்கு மொத்தமாக இரத்ததானம் செய்வோரில் 40%க்கும் அதிகமாகும்.
காத்தான்குடியில் காணப்படும் இந்த விழிப்பனர்வுக்கு மிக அதிகமான அளவு பங்களிப்புச்செய்தவர்கள் இரத்ததான முகாம்களை ஒழுங்கு செய்யும் சமூகசேவை அமைப்புகளாகும்.
காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய ஊர்களில் சுமார் 10க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் நீண்டகாலமாக பல சிரமங்களுக்கு மத்தியில் இதனைத் தொடர்ந்து செய்துவருகின்றனர்.
இந்த அமைப்புகளுக்கு மத்தியில் ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டு பல விடயங்கள் ஒழுங்கமைக்கப்பட்டவேண்டும் என்பது மிக நீண்டகாலமாக உணரப்பட்டவிடயமாகும்.
இதனைக் கருத்திற்கொண்டு Kattankudy doctors forum ( KDF) இவ்வமைப்புக்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஓன்றினை கடந்த 25/12/2015 ம்திகதி காத்தான்குடி MOH காரியாலயத்தில் Dr. ஷியாம் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்தது.
இதில் பின்வரும் விடயங்கள் ஆராயப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன.
1- காத்தான்குடியில் உள்ள அனைத்து இரத்ததானம் செய்வோர்கள் மற்றும் அதனை ஒழுங்குசெய்யும் அமைப்புகள் உள்ளடக்கியதான "காத்தான்குடி இரத்ததானம் செய்வோர் சமூகம் " ஒன்றினை ஆரம்பித்தல் .
2-இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளாத / அழைக்கப்படாத ஏனைய அமைப்புக்களுடன் தொடர்புகளை எற்படுத்தி அவர்களையும் இதனுடன் இணைத்துக்கொள்ளுதல்
3- காத்தான்குடி தளவைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படவுள்ள இரத்தவங்கிக்கான முடியுமான ஆதரவினை வழங்குதல்.
4- இரத்ததானம் செய்வோர்களின் சுகாதார நலன்கள் தொடர்பாக இலவச ஆலோசனைகளை வழங்குதல்.
5- தேசிய இரத்தவங்கி மற்றும் மட்டக்களப்பு இரத்தவங்கிகளுடான தொடர்புகளை பேணிக்கொள்ளுதல்.
6-இரத்தம் வழங்குவோர் , இரத்தம் தேவையானோர்களுடையான தொடர்புகளை இலகுவாக்க மற்றும் தேசிய, சர்வதேச தொடர்புகளை ஏற்படுத்த இணையத்தளம் ஒன்றினை உருவாக்குதல்.
7- இரத்ததானம் தொடர்பான விழப்புணர்வுகளை உள்ளூர் , வெளியூர்களில் அதிகரிக்க முயற்சித்தல்.
8- இரத்ததான முகாம்களின் கால அட்டவணையினை தயாரித்தல்.
9- எனைய சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் பங்குகொள்ளுதல்.
Masha Allah. Good work Dr.Shiyam
ReplyDeleteNo need to look for another centers for this...simply you all can join with SLTJ & K'kudy branch of SLTJ. SLTJ is no.1 in blood donation in Sri Lanka...
ReplyDeleteSltj.thodarnthu srilankavil 3vardam 1st.place ippa ellorum muyatchi seygirargal good thawheed ellavatrilum mudalil ulladu masha allah bithath oligirathu
ReplyDelete