Header Ads



குடும்பம் ஒன்று கலைக்கப்படுவதனை தடுக்கவே முயற்சித்தேன் - ஹிருனிகா

குடும்பம் ஒன்று கலைக்கப்படுவதனை தடுக்கவே முயற்சித்தேன் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து அவர் விளக்கம் அளித்திருந்தார்.

தமது பணியாளர் ஒருவரின் குடும்பம் வெளிநபர் ஒருவரினால் சிதைவடையக் கூடிய அளவு பிரச்சினை ஏற்பட்டதனால் அதற்கு உதவுவதற்காக தாம் முயற்சித்ததாகத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் தமது பணியாளர்கள் என்றாலும் சட்ட விரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தால் அவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது பணியாளர் ஒருவரின் மனைவியுடன் குறித்த இளைஞர் தகாத உறவு கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

குறித்த பணியாளரின் மனைவியை,  குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் பலவந்தமாக அழைத்து சென்று வைத்திருந்ததாகவும் அந்தப் பெண்ணுக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் ஹிருனிகா தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகளை தவிர்ப்பதே தமது நோக்கமாக இருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. A new generation thug. What right does this woman have to take law in her hand? So called law makers are the biggest law breakers in Sri Lanka.

    ReplyDelete
  2. No any rights to Hirunika to deal this case

    ReplyDelete

Powered by Blogger.