Header Ads



வஸீம் தாஜு­தீன் கொலை - இன்று முக்கிய தீர்ப்பு வெளியாகிறது

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் மர்ம மரணம் குறித்த வழக்கு விசா­ரணை 10-12-2015 இடம்­பெ­ற­வுள்­ளது.

கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்­னி­லையில் இந்த வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

கடந்த 2012 மே மாதம் 17 ஆம் திகதி நார­ஹென்­பிட்டி பொலிஸ் பிரிவில் எரிந்­து­கொன்­டி­ருந்த தனது காருக்குள் இருந்து வஸீம் தாஜுதீன் சட­ல­மாக மீட்­கப்­பட்டார்.

இந் நிலையில் அப்­போது முதல் அவ­ரது மரணம் தொடர்பில் தொடர்ச்­சி­யாக விசா­ர­ணைகள் இடம்­பெற்றுவந்­தன.

அவ­ரது மரணம் குறித்து தற்­போது குற்றப் புல­னாய்வுப் பிரிவு விச­ர­ணை­களை நடத்தும் நிலையில் அது தொடர்­பி­லான நீதி­மன்ற விசா­ர­ணை­களும் இடம்­பெற்று வரு­கின்­றன.

கடந்த வாரம் கொழும்பு பிர­தான சட்ட வைத்­திய அதி­காரி அஜித் தென்­னகோன் இறுதி பிரேத பரி­சோ­தனை அறிக்­கையை நீதி­வா­னுக்கு சமர்­பித்த நிலையில், வஸீம் தாஜு­தீனின் மர்ம மரணம் தொடர்­பி­லான மரண விசா­ர­ணையின் தீர்ப்பை நீதிவன் அறிவிப்பர் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.