Header Ads



வடமாகாண மீள் குடியேற்றம் தொடர்பான, துரித நடவடிக்கை குழுவின் பிரதிநிதியாக முத்தலீப் பாவா

வடமாகாண மீள் குடியேற்றம் தொடர்பான துரித நடவடிக்கை குழுவின் வடமாகாண பிரதிநிதியாக வன்னி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலீப் பாவா பாரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீர் வழங்கள் மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சரும்,சிறிலங்கா முஸ்ஸீம் ஹாங்கிரசின் தேசிய தலைவருமான ரவூப் ஹக்கிம் அவர்களினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனப்பதிரம் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ்விடையம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பென்று இன்று  மன்னார் மூர்வீதியில் உள்ள அவரது இல்லத்தில் இடம் பெற்றது.

இதன் போது வடமாகாண மீள் குடியேற்றம் தொடர்பான துரித நடவடிக்கை குழுவின் வடமாகாண பிரதிநிதியான வன்னி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலீப் பாபா பாரூக் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், வட மாகாணத்தின் மீள் குடியேற்றம் துரித கதியில் இடம் பெற வேண்டும் என்பதற்காக வடமாகாண மீள்குடியேற்ற துரித குழு ஏற்கனவே கூட்டப்பட்டிருந்தது.

இதன் போது வடமாகாண முதலமைச்சர், வடமாகாண ஆளுனர், அமைச்சர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது வடமாகாணத்தின் மீள் குடியேற்றத்திற்கு வடமாகாண முதலமைச்சர் மற்றும் வடமாகாண ஆளுனர் ஆகியோர் இணைத்தலைவர்களாக இருந்து இவ்வாறான மீள் குடியேற்றங்கள் தொடர்பில் திட்டங்களை மேற்கொள்வார்கள்.

இதன் போது முஸ்ஸீம் காங்கிரசின் சார்பாக எமது தலைவர் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நிலையில் அவர் சார்பாக நியமிக்கப்பட்டுள்ள வடமாகாண மீள் குடியேற்றம் தொடர்பான துரித நடவடிக்கை குழுவின் வடமாகாண பிரதிநிதியாக நான் அங்கு கலந்து கொள்வேன்.

அதற்காக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். இவ்விடையம் தொடர்பாக நான் வடமாகாண முதலமைச்சர் மற்றும் வடமாகாண ஆளுனர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளேன்.

எதிர்வரும் காலங்களில் மீள் குடியேற்றம் தொடர்பாக இடம் பெறும் விசேட கலந்துரையாடல்களில் நானும் கலந்து கொள்வேன் என வடமாகாண மீள் குடியேற்றம் தொடர்பான துரித நடவடிக்கை குழுவின் வடமாகாண பிரதிநிதியான வன்னி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலீப் பாபா பாரூக் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.