Header Ads



தாடியை நீளமாக வைத்திருந்த, இஸ்லாமிய ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கம்

பிரான்ஸ் நாட்டில் உள்ள விமான நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த இஸ்லாமிய ஊழியர்கள் தாடியை நீளமாக வைத்திருந்த காரணத்திற்காக பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் பாரீஸில் கடந்த நவம்பர் 13ம் திகதி ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பிறகு பிரான்ஸில் உள்ள Orly என்ற விமான நிறுவனம் இஸ்லாமிய ஊழியர்கள் மீது கடுமையான விதிமுறைகளை விதித்தது.

தாக்குதல் நடந்த சில நாட்களுக்கு பிறகு, விமான நிலையத்தில் பணிபுரிந்த ஒட்டுமொத்த இஸ்லாமியர் ஊழியர்களையும் அழைத்து ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளது.

அப்போது, ‘இஸ்லாமிய ஊழியர்கள் அனைவரும் தாடியை நீளமாக வளர்க்க கூடாது என்றும் அதனை உடனடியாக குறைத்து வெட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

மேல் அதிகாரிகளின் உத்தரவிற்கு ஊழியர்கள் அனைவரும் தாடியை குறைவாக வெட்டியுள்ளனர். ஆனால், பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய இரண்டு இஸ்லாமிய ஊழியர்கள் மட்டும் தாடியை நீளமாகவே வைத்துள்ளனர்.

விமான நிறுவனத்தின் விதிமுறைகளை பின்பற்றாத காரணத்திற்காக அவர்கள் இருவரையும் உடனடியாக பணியிலிருந்து நீக்கியுள்ளனர்.

இது குறித்து பேசிய பணி நீக்கம் செய்யப்பட்ட Bachir (28) என்ற இஸ்லாமிய வாலிபர், ‘தாடியை நான் மத நம்பிக்கை காரணமாக வளர்க்கவில்லை. வித்தியசமாக இருக்கட்டுமே என்ற காரணத்திற்காக தான் வளர்க்கிறேன் என கூறியும் தன்னை பணியில் இருந்து நீக்கியுள்ளதாக’ வேதனை தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த விமான நிலைய அதிகாரிகள், ‘இருவரும் விமான நிலைய விதிமுறைகளை பின்பற்ற வில்லை என்பது முதல் குற்றச்சாட்டு.

மேலும், தாடிக்காக மட்டும் இருவரும் நீக்கப்படவில்லை. அடிக்கடி விடுமுறை எடுப்பது, பணிக்கு தாமதமாக வருவது, சக ஊழியர்களிடம் ஓயாமல் பேசிக்கொண்டு இருப்பது உள்ளிட்ட காரணங்களுக்காகவும் அவர்கள் இருவரையும் பணியில் இருந்து நீக்கியுள்ளாதாக’ தெரிவித்துள்ளனர்.

விமான நிலைய அதிகாரிகள் இவ்வாறு கூறினாலும், அந்த விமான நிலையத்தில் மத வேறுபாடுகளை பார்ப்பது உண்மை தான் என அங்குள்ள பிற ஊழியர்களும் புகார் கூறி வருகின்றனர்.

உதாரணத்திற்கு, பாரீஸில் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னதாக, அதாவது கடந்த யூன் மாதம் Bechir(34) என்ற இஸ்லாமிய ஊழியரையும் தாடியை காரணம் காட்டி பணியில் இருந்து நீக்கியுள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது.

தாடியை நீளமாக வைத்திருந்த காரணத்திற்காக விமான நிலையத்தில் பணியாற்றிய இரண்டு இஸ்லாமிய ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது அந்நாட்டு இஸ்லாமியர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

1 comment:

  1. தாடி வளர்த்த Jewish Rabai களின் நிலை என்ன ? தாடி வளர்த்த பாதிரியார்களின் நிலைமைதான் என்ன? தாடி வளர்தமைக்காக வேலை நிறுத்தம் செய்ய முடியுமா ? Can it be Possible under European Human Rights Law ?
    World Wide Biker Gangs also keep long beard. What will they gonna do for them? Would they challenge them as well?

    ReplyDelete

Powered by Blogger.