Header Ads



பேஸ்புக்கை பயன்படுத்த வயதெல்லை நிர்ணயம் - அரசாங்கம் தீவிர கவனம்

சமூக வலைத்தளமான பேஸ்புக்கை பயன்படுத்துவதற்கு குறைந்த பட்ச வயதெல்லையை நிர்ணயம் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் நாட்டில் பேஸ்புக் கணக்கொன்றை ஆரம்பிக்க குறைந்தபட்ச வயதெல்லை ஒன்றை நிர்ணயம் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமூக வலைத்தளமான பேஸ்புக் ஊடாக பாடசாலை மாணவர்கள் மற்றும் மாணவிகள் பலர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகக்கூடிய அபாயம் அதிகளவில் காணப்படுவதானால் குறித்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு இளம் தலைமுறையினர் ஆபத்துக்களை எதிர்நோக்க நேரிடும் என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து, பேஸ்புக் கணக்கு ஒன்றை ஆரம்பிப்பதற்கான வயதெல்லையை திருத்தி அமைப்பது குறித்து உரிய தரப்புக்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பேஸ்புக் கணக்ககொன்றை  ஆரம்பிப்பதற்கு ஐரோப்பாவில் குறைந்தபட்ச வயதெல்லையாக 13 ஆக காணப்பட்ட போதிலும் தற்போது அந்த வயதெல்லை 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புத்திஜீவிகள், சட்டத்தரணிகள், துறைசார் நிபுணர்களின் பங்களிப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி இவ்வாறு இலங்கையிலும் கணக்கு ஒன்றை ஆரம்பிப்பதற்கு குறைந்தபட்ச வயதெல்லை ஒன்றை நிர்ணயம் செய்வது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

1 comment:

  1. பெற்றோரின் கண்காணிப்புடன் மட்டும் இயக்கப்படக் கூடிய கணக்குகள் வயது குறைந்தவர்களுக்கு அறிமுகம் செய்யபப்டல் வேண்டும். வயது குறைந்தவர்களின் inbox இற்கு செல்லும் மெசேஜ்கள் அவர்களின் பெற்றோருக்கும் CC பண்ணப்படும் வகையில் இருந்தால் மிகவும் நல்லது.

    ReplyDelete

Powered by Blogger.