Header Ads



'பிரேசில் பெண்கள், சில ஆண்டுகளுக்கு கர்ப்பம் தரிப்பதை தவிர்க்க வேண்டும்"

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் பரவி வரும், 'ஜிங்கா' வைரஸ் காரணமாக, புதிதாக பிறக்கும் குழந்தைகள் மூளை பாதிப்புடன் இருப்பதால், அந்நாட்டு பெண்கள் கர்ப்பம் தரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த, 70 ஆண்டுகளுக்கு முன், ஆப்ரிக்க நாட்டு குரங்குகள் மத்தியில், ஜிங்கா என்ற வைரஸ் பரவியிருந்தது. இந்த வைரஸ் கடுமையான மூளை பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவும்போது, மரணத்தை ஏற்படுத்தும்.இந்நிலையில், பிரேசிலில், 2014ல் பிறந்த, 147 குழந்தைகள் மூளை பாதிப்புடன் இருந்தன. 

அந்தக் குழந்தைகளின் ரத்தத்தை பரிசோதித்த போது, அதில், ஜிங்கா வைரஸ் இருப்பது உறுதியானது. உடன், அந்நாட்டு சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில், மீன்கள் மூலமாக இந்த வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, 'பிரேசில் பெண்கள், சில ஆண்டுகளுக்கு கர்ப்பம் தரிப்பதை தவிர்க்க வேண்டும்; வீடுகளில் மீன் வளர்ப்பதையும், உண்பதையும் உடனடியாக நிறுத்த வேண்டும்' என, எச்சரிக்கப்பட்டு உள்ளது.

No comments

Powered by Blogger.