பாரீஸில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு, சாத்தானின் தூண்டுதலே காரணம் - கிறித்துவ மதகுரு
பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு சாத்தானின் தூண்டுதலே காரணம் என சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய கிறித்துவ மதகுரு ஒருவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் கடந்த நவம்பர் 13ம் திகதி ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர்.இவர்களில் பாட்டக்லான் இசை நிகழ்ச்சியில் இறந்த 90 பேரும் அடங்குவர்.
இந்நிலையில், இசை நிகழ்ச்சியில் உயிரிழந்த மக்களை அவமதிக்கும் வகையில், ‘சாத்தானின் தூண்டுதலால் தான் அவர்கள் கொல்லப்பட்டனர்’ என Francois Schneider என்ற கிறித்துவ மதகுரு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
மதகுருவின் இந்த கருத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தையும் பொதுமக்களையும் மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது.
இது தொடர்பாக கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், நேற்று Wissembach நகரில் மதகுரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார்.
அப்போது பேசிய மதகுரு, ‘இசை நிகழ்ச்சியின்போது உயிரிழந்தவர்களை பற்றி பொருத்தமில்லாமலும், அநாகரீகமாகவும் கருத்து கூறியதற்காக நான் மிகவும் வருத்தமடைகிறேன்’ என கூறியுள்ளார்.
’சில நேரங்களில் மோசமான சம்பவங்கள் நிகழும்போது உணர்ச்சி மிகுதியால் தேவையில்லாத வார்த்தைகளை பேசிவிடுவது தவறாகும். இதற்காக தான் மன்னிப்பு கோருவதாக அந்த மதகுரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
இதேபோல், தாக்குதல் நிகழ்ந்த சில நாட்களில் Lyon நகர மதகுரு ஒருவர் ‘தாக்குதலில் உயிரிழந்தவர்களும் தீவிரவாதிகளும் உடன் பிறந்த சகோதரர்கள்’ என கருத்து கூறியதற்காக அவரது பதவி உடனடியாக பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Idan karutthu Satanai vanankum illuminaties
ReplyDelete