வசிம் தாஜூடீன் என்ற பெயர், எங்கள் வெற்றியை பாதித்தது - நாமல் ராஜபக்ச
ரக்பி வீரர் வாசிம்தாஜூடீன் கொலையுடன் தொடர்புபட்டுள்ளார் என தெரிவிக்கப்படும் கப்டன் திசா என்ற நபர் குறித்து தனக்கு எதுவும் தெரியாதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வாசிம் தாஜூடீன் எனது நண்பர் நாங்கள் ஓரே வகுப்பில் கற்றவர்கள். தேசிய அளவு வரை நாங்கள் ஓன்றாக ரக்பி விளையாடியவர்கள், நாங்கள் நண்பர்கள்.
வாசிம் தாஜூடீன் எனது நண்பர் நாங்கள் ஓரே வகுப்பில் கற்றவர்கள். தேசிய அளவு வரை நாங்கள் ஓன்றாக ரக்பி விளையாடியவர்கள், நாங்கள் நண்பர்கள்.
நாட்டில் நடைபெறும் அனைத்திற்கும் ராஜபக்சாக்களை குற்றம் தெரிவிக்கும் காலத்தில் நாங்கள் உள்ளோம். எதிர்காலத்திலும் இது தொடரும், இவை அனைத்தும் வெப்தளமொன்றில் வெளியான தகவலை அடிப்படையாக வைத்து ஆரம்பமாகியது. தற்போது தாஜூடீனின் மரணம் குறித்த விசாரணைகள் முற்றாக அதனை அடிப்படையாக வைத்தே இடம்பெறுகின்றன.
அரசியல் ஆதாயம் பெறுவதற்கு அவர்கள் விரும்பும்போது, அவர்கள் ராஜபக்ச முஸ்லீம் இளைஞர்களை கொலைசெய்துவிட்டார் என்ற விடயத்தை இதற்கு பயன்படுத்துகின்றனர். அரசியல் ஆதாயம் பெறுவதற்கான சந்தர்ப்பமாக அவர்கள் இதனை பயன்படுத்துகின்றனர்,ஆனால் இது எங்கள் குடும்பத்தினை காயப்படுத்துகின்றது.
தேர்தல் சமயத்தில் ரக்பி வீரரின் பெயரை அரசாங்கம் பயன்படுத்தியது எங்களது வெற்றியை பாதித்தது, இது ராஜபக்சாக்களும் முஸ்லீம் சமூகத்தினருக்கும் இடையில் பதட்டத்தை உருவாக்கியது. யார் கப்டன் திசா,எனக்கு அவ்வாறான எவரையும் தெரியாது,இந்த கொலை குறித்து அவ்வாறான நபர் ஓருவரை நீதிமன்றம் விசாரணைக்காக அழைத்துள்ளதா, அவ்வாறான சந்தேகநபர் உள்ளாரா என்பது எனக்கு தெரியாது அதனால் இது குறித்து கருத்து தெரிவிக்கமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
உமக்கு என்னதான் தெரியும்?
ReplyDelete