Header Ads



ஒரு சொப்பிங் பேக்குடன் அகதியாக விரட்டப்பட்ட என்னை, இறைவன் அமைச்சராக்கினான் - றிசாட்

(JM.Hafeez)

வில்பத்துவில் 'குடு' வியாபாரம் செய்வதாக இனவாதிகள் மற்றொரு கதையை கட்டியுள்ளனர். இவை அனைத்தும் ஒரு திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இனவாத செயற்பாடாகும்  என்று கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சர் றிசாட் பதியுதின் தெரிவித்தார்.(21.12.2015 இன்று மாலை)
மடவளையில் இடம் பெற்ற ஒரு கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது-

நான் ஒரு சொப்பிங் பேக்குடன் அகதியாக விரட்டி அடிக்கப்பட்டேன். அன்று என்னுடன் அகதிகளாக வந்த ஒரு இலட்சம் பேர் தொடர்பாக எவரும் குரல்கொடுக்க வில்லை. 79 பள்ளிகள் 60 பாடசாலைகள் 5 பில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட சொத்துக்கள் போன்ற வற்றைக் கைவிட்டு வந்த எமக்கு குரல் கொடுக்க சர்வதேச அமைப்புக்கள் எதுவும் இருக்கவில்லை. இன்று எடுத்ததெற்கெல்லாம் குரல் கொடுக்கும் எமது அயல்நாடான இந்தியாகூட அன்று மௌனம் சாதித்தது.

ஆனால் இன்று  உலகத் தலைவர்களுடன் கதைக்கும் தைரியத்தை இறைவன் எனக்குத் தந்தான். என்னை அமைச்சராக்கினான். இதன் காரணமாக எப்படியோ இறைவன் அருளால் கடந்த ஜந்து வருடங்களில் 8000 குடும்பங்களை வடக்கே குடியேற்ற முடிந்தது. இதுதான் இன்றைய இனவாதிகளுக்கு உள்ள பிரச்சினையாகி விட்டது.

இதனை தடுப்பதற்கே அவர்கள் பல இலட்சங்களை செலவிட்டு ஆகாய மார்க்கமாகச் சென்று புபைப்படம் எடுத்து போலிப்பிரசசாரம் செய்து என்னையும் நான் சார்ந்த சமூகத்தையும் அவதூருக்கு உள்ளாக்கு கின்றனர். வில்பத்துவில் நாம் காடு அழிக்கவில்லை.

இப்போது நாம் வில்பத்துவில் 'குடு' வியாபாரம் செய்வதாக இனவாதிகள் மற்றொரு கதையை கட்டியுள்ளனர். இவை அனைத்தும் ஒரு திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாகும் என்றார்.




1 comment:

  1. அல்லாh உங்களுடன் இருக்கிறான் சமுகத்திற்காகப் பாடுபடும் உங்களை அல்லாh கைவிடமாட்டான் நீங்கள் மற்றைய சமுகங்களின் குடியேற்றத்தித்தில் காட்டிய முன்னுரிமையை நமது சமுகத்திற்கும் அப்போதே காட்டியிருந்தால் இந்த இனவாதிகள் தலை துhக்கியிருக்க மாட்டார்கள் உங்களை முன்னைய ஆட்சியாளர்கள் ஏமாற்றினார்கள் என்றுதான் கூற வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.