Header Ads



ச‌ம்மாந்துறையில் ப‌ள்ளிவாச‌ல் உடைப்பு, சுற்றுலா ப‌ய‌ணிபோல பார்த்துச்சென்ற ஹ‌க்கீம் - முபாற‌க் மௌலவி சாடல்

ச‌ம்மாந்துறை சொறிக்க‌ல்முனை ம‌ஸ்ஜித் ர‌வ்லா ப‌ள்ளிவாச‌ல் உடைக்க‌ப்ப‌ட்ட‌மை ந‌ல்லாட்சியை கேள்விக்குட்ப‌டுத்தியிருப்ப‌துட‌ன் குற்ற‌வாளிக‌ளை க‌ண்டு பிடிக்க‌ அர‌சாங்க‌ம் உட‌னடி ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் ஜ‌னாதிப‌திக்கு அனுப்பி வைத்துள்ள‌ தொலை ந‌க‌லில் குறிப்பிட்டுள்ளார். 

அவ‌ர் அதில் மேலும் தெரிவித்திருப்ப‌தாவ‌து, 

க‌ட‌ந்த‌ ம‌ஹிந்த‌ அர‌சில் ப‌ல‌ ப‌ள்ளிவாய‌ல்க‌ள் தாக்க‌ப்ப‌ட்ட‌மை கார‌ண‌மாக‌வே ம‌ஹிந்த‌ அர‌சை முஸ்லிம்க‌ள்வெறுத்த‌ன‌ர். அதே நிலை இன்றைய‌ அர‌சிலும் தொட‌ர்வ‌து ந‌ல்லாட்சியிலும் இன‌வாத‌ம் ஒழிய‌வில்லை என்ப‌தையே காட்டுகிற‌து. அதுவும் அர‌சின் பிர‌தான‌ அமைச்ச‌ரும் முஸ்லிம் காங்கிர‌சின் த‌லைவ‌ருமான‌ அமைச்ச‌ர் ஹ‌க்கீம் அம்பாரை மாவ‌ட்ட‌த்துக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த‌ நிலையிலேயே இச்ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்துள்ள‌மை 2002ம் ஆண்டு ஹ‌க்கீம் இருக்கும் போதே மூதூர் தாக்க‌ப்ப‌ட்ட‌மையை ஞ‌ப‌க‌ப்ப‌டுத்துகிற‌து. 

அப்போது போன்றே இப்போதும் உடைக்க‌ப்ப‌ட்ட‌ மேற்ப‌டி ப‌ள்ளிவாய‌லை சுற்றுலா ப‌ய‌ணி போல் பார்த்துவிட்டு சென்றுள்ளாரே த‌விர‌ இதுவ‌ரை ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌ட்ட‌தாக‌ தெரிய‌வில்லை. 

ஆகவே 45 வ‌ருட‌ வ‌ர‌லாறு கொண்ட‌ இந்த‌ ப‌ள்ளிவாய‌ல் இடிக்க‌ப்ப‌ட்டுள்ள‌மை மிக‌வும் க‌ண்டிக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ விட‌ய‌ம் என்ப‌துட‌ன் இது விட‌ய‌த்தில் அர‌சு உட‌ன‌டியாக‌ தொட‌ர்பு கொண்டு இதில் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை கைது செய்வ‌துட‌ன் அர‌ச‌ உத‌வியில் மீள் க‌ட்ட‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி வ‌லியுறுத்துகிற‌து.

8 comments:

  1. முபாரக் மெளலவி அவர்களே, தலைவர் ஹகீம் அவர்களை நீங்கள் இப்படி கூரியது, கொஞ்சம் அதிகப் பிரசங்கமாக தெரிய வில்லையா???

    ReplyDelete
  2. Pera kettale aziruzilla

    ReplyDelete
  3. அவர் செய்யவில்லை , இவர் செய்யவில்லை என்று கூறுகிறீர்களே. நீங்கள் என்ன செய்தீர்கள்?

    ReplyDelete
  4. Mr mubarak may b that mosque belongs to your party.

    ReplyDelete
  5. தயவுசெய்து பார்த்தவர் கேக்காதவர் என சாடி இவ்வாரு அரிக்கை விடுவதெல்லாம் இனப்பற்றாகிவிடமுடியாது நீங்கலும் ஒரு கட்சிக்கு தலைவர் என்பதால் உங்களால் முடியுமானவற்ரையும் செய்துகாட்டுங்கள் அல்லது மற்றவரைசாடி அரிக்கைவிடுவதை நிருத்துங்கள் இவ்வாரான விடயங்கள் தன் இயலாமையின் வெலிப்பாடாகும்

    ReplyDelete
  6. He did what he can.....(all of the commentators...!!!)
    He has not any power but at least he faxed the message to the president....
    These "Mooooslim heaaaads" they have power and they are very close to Maithiri & Ranil...but what they did....? Nothing that is what he is talking not none sense...
    You people (commenting) simply know the chilli habbit...you never do anything....and you never allow whoever want to do... Dont keep always rubbish mind...just be fresh and be aware from almighty...... You see one child (Zayan) is seeing this as party Masjid...!...what is rubbish....!! r u zyonist..???

    ReplyDelete
  7. நாம் அறிந்தவரை பள்ளிவாசல் உடைக்கப்படவில்லை. அதைச்சுற்றி அமைக்கப்பட்டிருந்த கொங்கிறீற் கட்டை கொண்ட சுற்று வேலி உடைக்கப்படடுள்ளது. இது கண்டனத்துக்குரியது. இதனைச் செய்தோா் கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டும்.

    ஆனால் இத்தகைய செய்திகளை ஊடகங்களுக்கு தெரியப்படுத்துவதற்கு முன் அது பற்றி நன்கு தெளிவு பெற்றுக்கொள்வது மிக முக்கியமானது. ஏனெனில் இத்தகைய செய்திகளை மக்கள் இன ரீதியாகவும் நோக்க வாய்ப்புள்ளது.

    ReplyDelete
  8. நாம் அறிந்தவரை பள்ளிவாசல் உடைக்கப்படவில்லை. அதைச்சுற்றி அமைக்கப்பட்டிருந்த கொங்கிறீற் கட்டை கொண்ட சுற்று வேலி உடைக்கப்படடுள்ளது. இது கண்டனத்துக்குரியது. இதனைச் செய்தோா் கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டும்.

    ஆனால் இத்தகைய செய்திகளை ஊடகங்களுக்கு தெரியப்படுத்துவதற்கு முன் அது பற்றி நன்கு தெளிவு பெற்றுக்கொள்வது மிக முக்கியமானது. ஏனெனில் இத்தகைய செய்திகளை மக்கள் இன ரீதியாகவும் நோக்க வாய்ப்புள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.