Header Ads



இலங்கை பெண்ணுக்கு கல்லெறிந்து கொலை செய்யும், தண்டனையை நிறுத்தியது சவூதி அரேபியா

இலங்கையை சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணுக்கு எதிராக சவூதி அரேபியாவின் ஷரியா நீதிமன்றத்தினால் கல்லெறிந்து கொலை செய்யப்பட வேண்டும் என வழங்கிய தீர்ப்பு தளர்ப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த தண்டனையை சிறைத்தண்டனையாக தளர்த்த சவூதி அரேபிய அரசாங்கம் இணங்கியுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள மற்றும் பிரதி வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ச டி சில்வா ஆகியோர் கொழும்பில் இன்று (23) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கையை கவனத்தில் கொண்டு சவூதி அரேபிய அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இலங்கை பெண் பிரிதொரு நபருடன்  தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டி அவருக்கு ஷரியா நீதிமன்றம் கல்லெறிந்து கொலை செய்யுமாறு தீர்ப்பளித்திருந்ததுடன் சம்பவத்துடன் தொடர்புடைய ஆணுக்கு 100 சையடிகளை வழங்குமாறும் தீர்ப்பளித்திருந்தது.

2 comments:

  1. இலங்கை அரசுக்கும்,இதற்காக முயற்சி செய்த சகலருக்கும் பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. Yaarum aanukkum pennukkum veru veru neediya endru ninaikathondrum islamiya sattapragaram anda thirumanamagadaver aagiyirundal avar thandanayum kadumayanade!

    ReplyDelete

Powered by Blogger.