Header Ads



ஜரோப்பிய ஒன்றியத்தின் வீட்டுத்திட்டத்தில், யாழ்ப்பாண முஸ்லிம்களை உள்வாங்குமாறு கோரிக்கை

-பாறுக் ஷிஹான்-

ஜரோப்பிய ஒன்றியத்தின் வீட்டுத்திட்டத்தில் யாழ் முஸ்லிம்  மக்களை உள்வாங்குமாறு யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம்  யாழ் அரசாங்க அதிபர் நா.வேதநாயகத்தை கோரியுள்ளது.

இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து இவ்வீட்டுத்திட்ட விடயம் தொடர்பான கடிதம் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஜமால் முஹைதீனால் வழங்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில்  1990ம் ஆண்டு பலவந்த வெளியேற்றத்தின் காரணமாக சொந்த மண்ணில் மீள்குடியேற முடியாமல் 25 வருட அகதி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் ஜரோப்பிய ஒன்றிய வீட்டுத்திட்டத்தில் பயனாளிகளாக உள்வாங்கப்பட வேண்டும்.

இன்று சுமார் 8000 குடும்பங்களாக பல்கி பெருகி இருக்கும் யாழ் முஸ்லிம் குடும்பங்களுள் 2161 குடும்பங்களே யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரிஇ வேலணை பிரதேச செயலாளர் பிரிவுகளில் மீள்குடியேற்றப் பதிவுகளை மேற்கொண்டு வாழ்ந்து வந்தனர்.

 ஆவர்களுள் சுமார் 317 குடும்பங்கள் வரையில் இந்திய வீடமைப்பு திட்டத்திற்காக விண்ணப்பித்தனர். ஆனால் பயனாளிகளாக 51 குடும்பங்கள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

மீதமானவர்கள் யாழ்ப்பாண முஸ்லிம்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத நிபந்தனைகளின் கடுமையான போக்கினால் பல காரணங்கள் சுமத்தப்பட்டு பயனாளிகள் பட்டியலில் இருந்து விழக்கப்பட்டு விட்டனர் யாழ் முஸ்லிம் சமூகத்திற்கு வீட்டுத் தேவையானது அத்தியாவசியமானதாகவும் அவசர தேவையானதாகவும் உணரப்பட்டுள்ளது.

ஊள்நாட்டில் இடம் பெயர்ந்து மீள்குடியமர்ந்த மக்களுக்கு வீட்டுத்திட்டத்தினை வழங்கி அவர்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஜரோப்பிய ஒன்றியம் நிதி உதவியை வழங்கவுள்ளது. இந்தத்திட்டம் போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிஇ முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிதேச ரீதியாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவே பத்திரிகைகள் ஊடாக அறிய முடிகின்றது.

மேற்படி பிரதேசங்கள் போன்று யாழ்ப்பாணமும் உள்வாங்கப்பட வேண்டும். குறிப்பாக யாழ்மாவட்டத்தில் அதிக அளவில் இருப்பிடங்கள் அழிவுக்குள்ளாக்கப்பட்ட சமூகம் யாழ் முஸ்லிம் சமூகமே (இனவிகிதாசார அடிப்படையில்) எனவே அவர்களுக்கு அதிக அளவில் வீட்டுத்தேவை இருப்பதாக உணரக் கூடியதாக உள்ளது. 

எனவே வழங்கப்பட இருக்கும் ஜரோப்பிய ஒன்றியத்தின் வீடமைப்புத்திட்டத்தில் யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களையும் உள்வாங்குமாறு யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம்  கேட்டுக் கொள்கின்றது. என்பதுடன் அம்மக்களை  இத்திட்டத்தில்  அவசியம் இணைத்துக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.