Header Ads



பல ஆயிரம்பேரை இஸ்லாத்தை, தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்கச்செய்த தம்பதிகள்..!

இவருடைய பெயர் எட்வின், பிலிப்பைன் நாட்டை சேர்ந்தவர்.

இறுதி பேருரையின் போது இங்கு வந்த நீங்கள் இங்கு வராத மக்களுக்கு இஸ்லாத்தை கொண்டு செல்லுங்கள், என்னிடமிருந்து ஒரேயொரு செய்தி கிடைத்தாலும் அதை பிறருக்கு எத்தி வையுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களே....

நம் உயிரினும் மேலான அண்ணலம் பெருமகனார் ரசூலே கரீம் சல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் நாவிலிருந்து அந்த வார்த்தை வெளிவந்தவுடன் சஹாபாக்களின் வாகனங்கள் எந்த திசையில் நின்றதோ அதே திசையில் புறப்பட்டு இஸ்லாத்தை உலக மக்களுக்கு சொல்வதற்கு சஹாபாக்கள் புறப்பட்டார்களோ....

அந்த இஸ்லாம் பிலிப்பைன் நாட்டை சேர்ந்த எட்வினை வந்தடைகிறது.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு எட்வின் இம்ரானாக மாறுகிறார். அரபு நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில் மனைவி, குழந்தைகளுடன் தற்போது வாழ்ந்து வருகிறார்.

எட்வினுக்கு கிடைத்த இஸ்லாம் கிடைக்காத கோடிக்கணக்கான எடிவின்களுக்கும், டேவிட்களுக்கும், பீட்டர்களுக்கும் கிடைப்பதற்காக இரவு பகல் பாராமல் கணவன் மனைவி இருவரும் இஸ்லாமிய பிரச்சாரம் செய்து பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் இம்ரான் மூலமாகவும், அவருடைய மனைவி மூலமாகவும் இஸ்லாத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுள்ளனர்.

இந்த தம்பதிகளை நினைக்கும் போது பல நேரங்களில் நாம் பொறாமைப்பட்டது உண்டு, நமக்கு கிடைத்த இஸ்லாத்தை, இஸ்லாத்தின் சுவையை நாம் மட்டும் சுவைக்கிறோமே, நம்முடைய தொப்புள் கொடி உறவுகளுக்கு கொண்டு சென்று அவர்களையும் சுவைக்க வைக்க முடியாமல் நிற்கிறோம்.

நிச்சயமாக நாம் சுயநலவாதிகள், நமக்கு கிடைத்த பொக்கிஷத்தை நம் உறவுக்கு கிடைக்கக்கூடாது என்று மனதால் நினைக்காவிட்டாலும் செயலால் சுணங்கி இருக்கிறோமே, நம்மை விட இம்ரான் ஆயிரம் மடங்கு உயர்ந்து சென்று விட்டார்.

இம்ரான் மீதும் இம்ரானின் குடும்பத்தார் மீதும் ஏக இறைவனின் நல்லருள் என்றென்றும் நிலவ ஏக இறைவனிடம் துஆ செய்யுங்கள்....

4 comments:

  1. Alhamdulillah. Allah must strengthen us in this journey

    ReplyDelete
  2. சகோதரர்களே... இங்கேயும் சில இஸ்லாத்தில் இணைந்து இஸ்லாத்தை தெளிவுபடுத்தும் சகோதரர்கள்!

    Dr. Bilal Philips
    Abdu Raheem Green, A BRITISH REVERT MUSLIM SCHOLAR .
    Abdul Malik Clare (Jerome Clare) - A CANADA REVERT MUSLIM
    Dr. Oz -
    CHRIST BLAUWELT
    .Prof Keith Moore
    eDDIE
    .Muhammad ALi
    Will Smith

    மேலும் உண்மைகளை ஆதாரங்களுடன் தேட,

    கீழுள்ள youtube தளத்தையும் மற்ற "the deen show " தளத்தையும் நாடுங்கள்!
    .
    https://www.youtube.com/watch?v=7XPFPg-yBcQ
    http://www.discoveringislam.org/dr_mcauliffe.htm
    http://www.thedeenshow.com/cat/Shows

    Allah Akbar!!

    ReplyDelete
  3. Enter your comment... Masha allah the graet work .

    ReplyDelete
  4. @ Niyas Will smith ? And Mohamed Ali? Even Keith Moore is not a Muslim but he does contribute.
    இஸ்லாத்தில் இனைந்து என்று கூரியள்ளீர்கள் may be you meant இஸலாமியர்களுடன் இனைந்து.

    ReplyDelete

Powered by Blogger.