Header Ads



ஜனா­தி­பதி செய­ல­கத்திலிருந்து பலர், வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள்

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் மாற்­றங்கள் பல­வற்றை மேற்­கொள்­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­திரிபால சிறி­சேன தீர்­மா­னித்­துள்­ள­தாக செய­ல­கத்தின் உயர் அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்­துள்ளார்.

தற்­போது ஜனா­தி­பதி செய­ல­கத்தில் உள்ள அதி­கா­ரிகள் பலரை நீக்­கி­விட்டு, அந்த இடங்­க­ளுக்கு புதி­ய­வர்­களை நிய­மிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

எதிர்­வரும் ஜன­வரி மாதம் முற்­ப­கு­தியில் இந்த மாற்றம் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அத­ன­டிப்­ப­டையில் செய­ல­கத்தின் பிர­பல முக்­கிய அதி­கா­ரிகள் சிலரும் மாற்­றப்­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்­றுள்­ள­தாக கூறப்­படும் அசா­தா­ர­ணங்கள் மற்றும் பல்­வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பிடப்படுள்ளது.

No comments

Powered by Blogger.