பௌத்த பிக்குவின் காதலுக்கு, இடையூறாக இருந்தவருக்கு கத்திக்குத்து
பௌத்த பிக்கு ஒருவரின் காதலுக்கு இடையூறாக இருந்த இளைஞன் கத்திக்குத்துக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் குருநாகல் வாரியபொல பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
இங்குள்ள விகாரையொன்றில் வாசம் செய்யும் பௌத்த பிக்கு ஒருவர் அப்பிரதேசத்தின் யுவதி ஒருவர் மீது, விருப்பம் கொண்டுள்ளார். எனினும் அந்த யுவதிக்கு ஏற்கனவே ஒரு காதல் தொடர்பு இருந்துள்ளது.
இதன் காரணமாக கடும் ஆத்திரமுற்ற பௌத்த பிக்கு, குறித்த இளைஞனுடன் நெருங்கிப் பழகி மதுஅருந்த அழைத்துள்ளார்.
இருவரும் மது அருந்தியிருந்த நிலையில் பௌத்த பிக்கு மறைத்து வைத்திருந்த கத்தியால் குறித்த இளைஞனை குத்தி படுகாயப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞன் வாரியபொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து குருநாகல் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
good monk....................
ReplyDeleteஅனேக பிரச்சினைகளுக்கு பெண்களே காரணமாக இருக்கின்றார்கள்...!!
ReplyDeleteஇஸ்லாமிய வாழ்வும், நெறிமுறையும் பிழைக்கும் போது அங்கு வாழ்க்கை முறையும் தளம்பிப் போய் விடுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறிய (எதிர்வுகூறலும்), நரகில் அதிகம் கண்டதும் பெண்களே!
My views fall in with you, brother..
Delete