பிரான்ஸ் தேர்தலில், இஸ்லாமிய எதிர்ப்பு கட்சி வெற்றி
பாரிஸ் தாக்குதலுக்கு பின்னர் பிரான்ஸில் இடம்பெற்ற பிராந்திய தேர்தலில் இஸ்லாமிய எதிர்ப்பு தீவிர வலது சாரி கட்சியான தேசிய முன்னணி கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
130 பேரை பலி கொண்ட பாரிஸ் தாக்குதல் இடம்பெற்ற மூன்று வாரத்திற்குள் அவசர நிலை அமுலில் இருக்கும் சூழலிலேயே கடந்த ஞாயிறன்று முதல் சுற்று பிராந்திய தேர்தல் இடம்பெற்றது.
இந்த தேர்தலில் பிரான்ஸின் 13 பிராந்தியங்களில் தேசிய முன்னணி கட்சி குறைந்தது ஆறு பிராந்தியங்களில் முன்னிலை பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோசி தலைமையிலான மைய வலதுசாரி குடியரசு கட்சி இரண்டாவது இடத்தை பிடித்திருப்பதோடு ஆளும் சோசலிச கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்த தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு வரும் டிசம்பர் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
தேசிய முன்னணி கட்சியின் தலைவர் மரினே லே பென் தனது இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் குடியேற்ற எதிர்ப்பு கருத்துகளால் பிரபலம் பெற்றவராவார். பாரிஸ் தாக்குதல் இந்த தேர்தலில் அதிக தாக்கம் செலுத்தி இருப்பதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment