பெண்களின் மார்புக் கச்சைகளை அகற்றிய, இசைக் கச்சேரியில் பங்கேற்ற மைத்திரியின் மருமகன்
கொழும்பில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற செக்ஸ் என்ட் லவ் இசை நிகழ்ச்சி தொடர்பில் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று கடும் விமர்சனத்தை வெளியிட்ட நிலையில், அந்த இசை நிகழ்வில் மைத்திரிபால குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மருமகனும் பாதுகாப்பு அமைச்சின் பொதுமக்கள் தொடர்பு அலுவலருமான வேவல்பானவ கமகே திலின சுரஞ்ஜித் உட்பட்ட மூன்று நண்பர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
இவர்கள் டிசம்பர் 21ஆம் திகதியன்று அதிகாலை 3 மணியளவில் எடுத்துக்கொண்டு புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் ஜனாதிபதி குறித்த நிகழ்வு இலங்கையின் கலாசாரத்துக்கு பங்கம் விளைவிப்பதாக கூறி அதன் ஏற்பாட்டாளர்கள் மீது கண்டனங்களை வெளியிட்டமையை கொழும்பின் ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
2
இந்த நாட்டின் கலாச்சாரம், நாகரீகம் என்பவற்றை சீர்குழைக்கும் விதமாக சர்வதேச பாடகர்களைக் கொண்டு நடத்தப்படும் நாகரீகமற்ற இசைக் கச்சேரிகளுக்கு அனுமதி வழங்காதிருக்க போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.
எதிர்காலத்தில் அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கான அனுமதி வழங்காதிருக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.
சில மணி நேரங்களுக்கு மட்டும் இடம்பெறும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் எமது இளம் யுவதிகள் அநாகரீகமாக நடந்து கொள்வதை அவதானிக்க முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற இதுபோன்ற இசைக் கச்சேரி ஒன்றில், பற்றுச்சீட்டுக்களின் பெறுமதிக்கேற்றவாறு வழங்கப்படுகின்ற மது, பியர், விஸ்கி போன்றவற்றை அருந்திவிட்டு எமது இளைஞர் யுவதிகள் மயங்கிக் கிடந்ததை ஊடகங்கள் மூலமாக காண முடிந்ததாக ஜனாதிபதி கூறினார்.
அத்தோடு பெண்கள் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்வதுடன், அவர்களின் மார்புக் கச்சைகளை கழற்றி பாடகர் மீது வீசி சந்தோஷப்படக்கூடிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதுபோன்ற அநாகரீகமான இசைக் கச்சேரிகளை ஏற்பாடு செய்வதற்கு இடமளிக்க வேண்டாம் என்று அரச அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஒரு நிகழ்சியில் நுழயை முன் அங்கு என்ன மாசேமாக நடக்கும் என்பது யாரும் அறிய முடியாது அவ்வாறான ஒரு நிலை இவர்களுக்கு ஏற்பட்டு இருக்கலாம் எவ்வாறாயினும் பௌத்த மதமும் இவ்வாறான விடயங்களை விரும்பவில்லை
ReplyDeleteOrganizer of the event is Mahela Jayawardene and Kumar Sangakkara (Ambassador of drug ................). Well done boys.......
ReplyDeleteILMA, இலங்கையின் புகழ் பெற்ற இரு கிரிக்கட் வீரர்களை இவ்வளவு இலகுவாக உங்களால் எப்படி இழிவு படுத்த முடிகின்றது? இதற்கான மனநிலைப் பின்னணியை உங்களுக்கு தந்தது எது?
ReplyDeleteமுதலில் Drug என்றால் என்ன என்றும், Liquor என்றால் என்ன என்றுமாவது தெரிந்து கொள்ளுங்கள். எல்லாவற்றையும், ஒரே கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பார்க்க வேண்டாம்.
ஊருக்கு உபதேசம் உனக்கல்லடா மருமகனே!
ReplyDelete