Header Ads



வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம் - ஜம்இய்யத்துல் உலமா

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் அவனின் தீன் பணியில் இஹ்லாசுடன் செயற்படும் பாக்கியத்தை தந்தருள்வானாக. ஆமீன்

              சமூக மேம்பாட்டிற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மேற்கொண்டுவரும் சகல நடவடிக்கைகளுக்கும், நீங்கள் வழங்கி வரும் ஒத்துழைப்புகளை அல்லாஹ் கபூல் செய்து அதன் கூலியை நாளை மறுமையில் ஜன்னதுல் பிர்தௌஸாகத் தந்தருள்வானாக.

சென்ற சில வாரங்களாக நம் நாட்டிலும் நமது அண்டை நாடான இந்தியாவின் தமிழ் நாட்டிலும் பெய்த பெருமழையின் காரணமாக பல பகுதிகளிலும் வெள்ளப்பெறுக்கு ஏற்பட்டு பல நூறு உயிர்சேதங்களும்  பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பாரியளவு பொருட் சேதங்களும் ஏற்பட்டடுள்ளன. உண்ண உணவின்றி உறங்க இடமின்றி மக்கள் பாரிய இன்னல்களுக்கும் கஷ்டங்களுக்கும் முகம்கொடுத்துள்ள நிலையில், பல தொண்டு நிறுவனங்களும் பள்ளி வாயல் நிர்வாகிகளும் தம்மாலான உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். எனினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலதிக அவசர உதவிகள் தேவைப்படுவதனால், உங்களால் முடிந்த மனிதாபிமான உதவிகளை அவசரமாக பணமாக  தந்துதவுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைக் குழு அன்புடன் வேண்டுகிறது. உங்களின் உதவிகளை ஜம்இய்யாவின் பின்வரும் வங்கி கணக்கினூடாகவோ அல்லது ஜம்இய்யாவின் தலைமை காரியாலயத்திலோ (பொருளின்றி) பணமாக வழங்கலாம்.

                         
                            ALL  CEYLON  JAMIYYATHUL  ULAMA
                                                        Account No. 1320006768  Commercial Bank, 
                                                         Branch  Maradana
                                                         Swift Code: CCEYLKLX
                       
இப்படிக்கு

....................................
அஷ்-ஷைக் அப்துல் முக்ஸித் அல்-பாஸி
செயலாளர்
சமூக சேவைகள் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Powered by Blogger.