நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டமும், சில சுவாரசிய தகவல்களும்..!
நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டம் பல்வேறு வரலாற்று புதுமைகளை கொண்டிருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக இந்த வரவு செலவுத்திட்டத்தின்போது இந்நாட்டின் அதிகாரத்தில் உள்ள ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் என ஜனாதிபதிகள் இருவர் உரையாற்றியுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு தடவைகள் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் வரவு செலவுத்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.
மேலும் இலங்கையின் வரலாற்றில் இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு மட்டுமே எதிர்க்கட்சித் தலைவர் ஆதரவாக வாக்களித்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும்இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இந்நிலையில் வரவு செலவுத்திட்டத்தின் கடைசி வாக்கெடுப்பு நாளான இன்று மேலும் பல விந்தைகள் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Post a Comment