நம்மை கண்கலங்க வைக்கும், முஸ்லிம் பெரியவரின் தியாகம்..!
இதுவரை ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளிவராத தியாகம்.
சாலையை மூழ்கடித்த வெள்ளத்தில் காரில் அவர் போய்க்கொண்டிருந்தபோது ஒரு முஸ்லீம் பெரியவர் நடுச்சாலையில் கையில் ஒரு செடியைப் பிடித்துக்கொண்டு நின்றிருக்கிறார். இறங்கி என்னவென்று விசாரித்த அந்த நண்பருக்குக் கண்கலங்கிவிட்டது.
சாலையின் அந்த இடத்தில் ஒரு குழி ஏற்பட்டுவிட்டது என்றும், யாரும் அதற்குள் விழுந்துவிடக் கூடாது என்பதால் அடையாளத் துக்காகச் செடியைப் பிடித்துக்கொண்டு நிற்கிறேன் என்றும் அந்த முஸ்லீம் பெரியவர் சொல்லியிருக்கிறார். ஊன்றிவிட்டு நீங்கள் போயிருக்கலாமே என்று நண்பர் கேட்டதற்கு, ஓடும் நீரில் செடி நிற்க மாட்டேன் என்கிறது, அதனால்தான் அதைப் பிடித்துக்கொண்டு நிற்கிறேன் என்று அந்த முஸ்லீம் பெரியவர் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்ல நண்பர்களே, அடுத்து வரும் விஷயம் தான் நம்மை மிக மிக அற்பர்களாகவும், அந்த முஸ்லீம் பெரியவரை மகாத்மாவாகவும் ஆக்குகிறது.
நண்பரிடம் அந்தப் பெரியவர் இப்படிச் சொல்லியிருக்கிறார், ‘கடந்த நான்கு மணி நேரமா நான் இப்படி நின்னுக்கிட்டிருக்கேன். யாராச்சும் பார்த்துக்குவாங்கனு அப்படியே விட்டுட்டுப் போவ மனசே வரல.”
தகவல் உதவி தமிழ் இந்து நாளிதழ்
12-12-2015
தேச பக்தி என்பது இதுதான்!
May Allah grant him happy and healthy life
ReplyDeleteஇதுதான் நபி(ஸல்) காட்டிய வழி.இதனை பின்பற்றுபவர்தான் முஸ்லிம். மனம்திறந்து சிந்தியுங்கள். இதனைவிட சிறந்த தஃவா எது?
ReplyDeleteஒருவரின் செயல், வார்த்தை என்பவை அவரின் மதிப்பை உயர்த்தவும் செய்கின்றது, தாழ்த்தவும் செய்கின்றது, அது செய்யும் செயல், அல்லது சொல்லலும் வார்த்தை எத்தகையது என்பதை பொறுத்தது.
ReplyDeleteEmpathy for others is an indispensable part in Islam. This Muslim elder is illustrative of that.May Allah accepts his selflessness and reward him!
ReplyDeleteBhn.Allshu give more helth&wealth him.all of them learn from him.
ReplyDelete