மக்கீன் ஹாஜியார் கலாபூஷணம் விருது பெற்றார்..!
(சுலைமான் றாபி)
நிந்தவூரைச் சேர்ந்த பிரபல கவிஞரும், எழுத்தாளருமான ஏ.எல்.எம். மக்கீன் (மக்கீன் ஹாஜியார்) 2015ஆம் ஆண்டுக்கான கலாபூஷணம் அரச விருதினைப் பெற்றுள்ளார்.
இன்று (15) செவ்வாய்க் கிழமை மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மண்டபத்தில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷா கோகுல பெர்ணான்டோ தலைமையில் நடைபெற்ற கலாபூஷணம் அரச விருது வழங்குதல் நிகழ்வில் "நாட்டாரியல்" துறைக்காக இந்த விருது அமைச்சர் டி.எம். சுவாமிநாதனால் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டார் பாடல்கள் இயற்றுதல், மற்றும் நாட்டார் கவி நெய்தல் துறைகளில் மிக நீண்ட காலமாக தடம்பதித்து வரும் இவர் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் ஓய்வு பெற்ற புத்தகக்காப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment