Header Ads



ஆங்கிலத்தை பேசாவிட்டால் பிழையில்லை, தாய்மொழியை சரியாக பேச முடியாவிட்டால் வெட்கம்

இலங்கையில் பெண்களே அதிகளவில் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்கின்றனர் என உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் மொஹான்லால் க்ரேரு தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில்  நடைபெற்ற பரிசளிப்பு விழா ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் 60 வீதமான பெண்கள் கல்வி கற்கின்றனர். பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளில் ஆண்களின் பங்களிப்பு குறைந்தளவில் காணப்படுகின்றது. உலகில் மொழி ஆளுமையின் அடிப்படையிலும் பெண்களே முன்னிலை வகிக்கின்றனர்.

உலகில் அதிகளவானவர்கள் ஆங்கில மொழி பேசுகின்றனர். எமது தாய்மொழியை சரியாக பேச முடியாவிட்டால் நாம் வெட்கப்பட வேண்டும்.

இரண்டாம் மொழியான ஆங்கிலத்தை சரிவரப் பேச முடியாவிட்டால் அது பிழையில்லை. முடிந்தளவிற்கு பிழையாகவேனும் ஆங்கிலத்தை பேசிப் பழகுவது நல்ல விடயமே.

தொழில் வழங்குனர்கள் ஆங்கில மொழியாற்றலை எதிர்பார்க்கின்றார்கள் என அமைச்சர் க்ரேரு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.