Header Ads



புதிதாக அறிமுகமாகவுள்ள அடையாள அட்டையும், முஸ்லிம்கள் எதிநோக்கி இருக்கும் பிரச்சினையும்..!

-Ash Sheikh M Z M Shafeek-

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு 

வரக்கூடிய 2016 ஜூன் மாதமளவில் இலங்கை அரசால்  புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இலத்திரனியல் (மின்னணு) தேசிய அடையாள அட்டையில் காணப்படும் புகைப்படத்தில் எந்தவொரு மதத்தையோ சமூகத்தின் கலாச்சாரத்தையோ பிரதிபலிக்கும் வகையிலான எந்தவொரு அடையாளமும் இருக்கமாட்டாது. சட்டத்தை மாற்ற எனக்கு அதிகாரமில்லை என ஆட்பதிவு தினைக்களத்தின் ஆணையாளர் அண்மையில் உறுதிப்பட தெரிவித்து செய்தி  வெளியிட்டிருந்ததை அனைவரும் அறிவோம்.

தேசிய அடையாள அட்டையில் முஸ்லிம்களின் அடையாளத்துக்கு அவ்வாறான தடை இருக்குமானால் முஸ்லிம்கள் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பது மிகத் தெளிவான விடையமாகும். முஸ்லிம் ஆண்கள் தொப்பி அணிந்து  அடையாள அட்டையை பெற்றுக் கொள்வது கூட  எமது உரிமை தான். இவ்வளவு காலமும் அவ்வாறே விரும்பியவர்கள் தொப்பி அணிந்தே அடையாள அட்டைகளை பெற்று வந்துள்ளனர். எமது மத, கலாச்சார ரீதியான உரிமைகளை வென்றெடுத்து முஸ்லிம்கள் இலங்கையில் தலை நிமிர்ந்து வாழ்வதற்கான சகல வழிகளையும் பெரும் போராட்டம் நடாத்தி எமது முன்னைய அரசியல், மத, சமூக தலைவர்கள் ஏற்படுத்தி விட்டு சென்றிருக்கின்றார்கள். மத நல்லிணக்கத்துக்காக விட்டுக் கொடுக்க வேண்டிய, நெகிழ்வுத் தன்மையை கடை பிடிக்க வேண்டிய பல அம்சங்கள் இருக்கின்றன. அவற்றில் நாம் கண்டிப்பாக தாராளத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.   இருப்பினும் இது போன்ற எமது உரிமையோடு சம்பந்தப் பட்ட விடையங்களை நாம் விட்டுக் கொடுப்போமாயின் பின்பு கடவுச் சீட்டு, சாரதி அனுமதிப் பத்திரம், அரச திணைக்களங்களில் சேவை செய்பவர்களுக்கான அட்டைகள், பாராளுமன்றினால்  அனுமதி வழங்கப் படக் கூடிய விசேட  அடையாள அட்டைகள் என இதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்லலாம். மாத்திரம் இன்றி எமது பல உரிமைகளிலும் கை வைக்கப் படலாம் என்பதை நாம் சிந்திக்கக் கடமை பட்டுள்ளோம்.

அத்தோடு  முஸ்லிம் பெண்களை பொறுத்த வரை அதை ஒரு போதும் முஸ்லிம்களாகிய நாம் விட்டுக் கொடுக்க முடியாது. விட்டுக் கொடுக்கவும் கூடாது.  அவ்வாறு விட்டுக் கொடுப்போமெனில் அது நடை முறையில் வரும் போது எமது பெண்கள் ஏராளமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம். குறிப்பாக அடையாளத்தை உறுதிப் படுத்த வேண்டிய தேவை ஏற்படும் பல சந்தர்ப்பங்களில் எமது முஸ்லிம் பெண்கள் முகத்தை மட்டும் காண்பிக்க முற்பட்டால் போட்டோவில் இருப்பதை சரியாக அடையாள படுத்திக் கொள்ள அவர்கள் அணிதிருக்கும் புர்காவை ( முகமூடி) ஹிஜாபை, முந்தானையை, தலை சீலையை அகற்றி விட்டு தலையை முழுமையாக காண்பிக்குமாறு நிர்பந்திக்கப் படலாம். 

நிச்சியமாக எமது சமூகம் இவ் விடையத்தில் காலம் தாழ்த்தி கண் விழிக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. (அதாவது குறித்த சட்டம் எப்போது  - 2016 ஜூன் மாதமளவில் -  அமுலுக்கு வருகின்றதோ அப்போது குரல் கொடுக்க ஆரம்பிக்கும். எனினும் அப்போது அது போன பஸ்சுக்கு கை காட்டிய கதையாகவே இருக்கப் போகின்றது என்பது திண்ணம். உண்மையில் இது  தவிர்த்துக் கொள்ள முடியுமான, அல்லது மாற்று வழிகள் உள்ள ஒரு விவகாரமாக இருந்தால் கூட சற்று நெகிழ்வுப் போக்குடன் நடந்து கொள்ள முடியும். எனினும்  நாட்டில் எமது அடையாளத்தை உறுதிப் படுத்திக் கொள்ளவும், அரச, பொது திணைக்களங்களில் எமக்குரிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகளில் இருந்து எம்மை விடுவித்துக் கொள்ளவும் கண்டிப்பாக எமது கையோடு இருக்க வேண்டிய ஒரு ஆவணம் என்பதால் நாம் அனைவரும் இதில் கண்டிப்பாக  கவனம் செலுத்தியாகவேண்டும்.   

இந்தப் பிரச்சினை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல ஏனைய மதத்தவர்களுடனும் சம்பந்தப்  பட்டிருக்கின்றது. குறிப்பாக கத்தோலிக்க அருட்சகோதரிகளுக்கு கூட இதனால் பல அசெளகரியங்கள்  ஏற்படலாம் என்பதால் இதற்கு சகல தரப்பினரும் இணைந்து தீர்வுகாண வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏனைய மதத்தவர்கள் மிகச்சிறிய அளவில் பாதிக்கப் பட வாய்ப்பு இருக்கின்ற போதிலும் கடந்த அரசில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப் பட்ட இனவாத செயற்பாடுகளின் பின்னணியிலே உருவான ஒரு சட்டமாகக் கூட இது இருக்குமோ என்ற சந்தேகத்தையும் எம்மில்  ஏற்படுத்துகின்றது. 

ஆகவே முஸ்லிம் அமைச்சர்கள், ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் கலாச்சார அமைச்சு, கத்தோலிக்க திருச் சபைகள், சமூகத் தலைமைகள் என அனைத்துத் தரப்பினரும் இனைந்து ஜனாதிபதியுடனும் அரச  பாதுகாப்பு, கலாச்சார அமைச்சுக்களுடனும் கலந்துரையாடி  இதற்கு ஒரு சுமூகமான தீர்வை பெற்றுத் தர வேண்டும்  என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். 

தயவு செய்து இக் கட்டுரையை வாசிப்பவர்கள் எவரேனும் மேற் குறிப்பிட்ட தரப்புகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பின் இதனை ஒரு சமூக சேவையாகவும், இபாதத்தாகவும் மனதிற் கொண்டு கண்டிப்பாக  அவர்களது கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்குமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம். 

17 comments:

  1. இஸ்லாம் சொல்லி இருக்கும் ஹிஜாப்புக்காக மாத்திரம் உரிமைக்குரல் எழுப்பினால் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் தொப்பி மப்பி என்று இல்லாததை இஸ்லாத்தின் உரிமை என்று சொல்லி அல்லாஹ்வின் உதவியை புறக்கணிக்காது இருப்பின் எமது உரிமைகளை அல்லாஹ் பாதுகாத்து தருவான்

    ReplyDelete
  2. 110-வருடங்களுக்கு முன் பெற்ற உருமையை நல்லாட்சி குழிதோண்டிப் புதைக்கிறதா?

    ReplyDelete
  3. Good article. ..ha ha what jammiyathul ulama.its a joke.do you think they will do anything good for us.

    ReplyDelete
  4. ACJU பிறை பார்க்கும் வேலையில் பிஸியாக இருக்கிறார்கள்! இதெல்லாம் அவர்களின் வேலையல்ல!

    ReplyDelete
  5. சட்டங்களை இன மத பேதங்களுக்கு அப்பால், மனிதத்துடன் பார்க்காமல், மதத்தை மட்டும் முன்னிறுத்திப் பார்த்து, மனிதத்தை குழிதோண்டிப் புதைக்க முற்படுவது மோசமானதாகும்.

    ReplyDelete
  6. yes is there two side one side is it only men okay, but women also want to remove hijab it's not acceptable. and also ACJU not like a before 10 years its doing so many good things in our community, don't blame blindly to other people or organization. what you did your community or your family. any how before implement should be want to discuss about this with government this is good point in this article.

    ReplyDelete
    Replies
    1. Mr.faizal..for you also don't go blindly with jammiyathul ulama.if they don any thing wrong you need to have the guts to against it.

      Delete
  7. அடையால அட்டையில் தொப்பியையும் ஹிஜாபையும் பார்ப்பதால் மட்டும்தான் முஸ்லிமை அடையாலப்படுத்தி பார்ப்பதென்பது புதிராக இருக்கிறது மூவினம் வாழும் நாட்டில் அடையாலஅட்டையை வைத்து ஒரு பிரட்சனை தோற்ருவிப்பது நல்லதல்ல முன்பு இருந்த அடையாலஅட்டைய விட இப்போது வறவிருக்கும் இலத்திரனியல் அட்டை ஒருவருடைய முலுவிபறங்கலை உல்லடக்கியதாகவும் ஒரே செக்கனில் அரியக்கூடியதாகவும் இருக்கும் எனவே இங்கு சிந்திக்கவேன்டிய ஒருவிடயம் எந்தவோரு மதத்தையோ கலாசாரத்தையோ பிறதிபழிப்பதாக இருக்காது என்ரு பொதுவாக சொல்லியிருக்கும் போது எங்களது கலாசாரத்தை இதில் ஏற்படுத்துங்கள் என்ரு போட்டிபோட்டு கொல்வது பிழையென்பதே எனது கருத்து ஆனாலும் வீன்பிறட்சனைகலுக்கு வித்திடாமல் சாதாரனமாக இதைமற்றவர்கலும் ஏற்ருக்கொன்டு ஏற்கனவே உள்ளதுபோல் தொடர்வதற்கு முன்வந்தால் அதில் மாற்ருக்கருத்துகிடையாது

    ReplyDelete
  8. I think here fingure print also will use so it is easy veryfy,,lets propose include this id with fingure print.

    ReplyDelete
  9. It is an essential to disscuss about this matter carefully

    ReplyDelete
  10. ஜப்னா முஸ்லிமில் கொமன்ட் பண்ணும் முஸ்லிம் சகோதரர்களுக்கு,

    அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.

    நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பின்னணியைக் கொண்டவர்களாக, வெவ்வேறு சமூக, சூழல்களில் வாழ்பவர்களாக இருக்கக் கூடும். ஆனாலும் உங்களின் கருத்துக்களை உங்களது சமூக சூழலை சேர்ந்தவர்கள் மட்டுமே வாசிப்பதில்லை, எல்லோருமே வாசிக்கின்றார்கள்.

    கொழும்பில் பல்லின மக்கள் மத்தியில் வாழ்கின்ற முஸ்லிமின் சமூக சூழலுக்கும், கிழக்கில் காத்தான்குடி போன்ற ஒரு முஸ்லிம் செறிவு நிறைந்த ஒரு சூழலில் வாழ்கின்ற முஸ்லிமின் சமூக சூழலுக்கும் பாரிய வேறுபாடு உண்டு. ஆனால், பொது ஊடகம் ஒன்றில் கருத்து எழுதும் பொழுது, அந்தக் கருத்து பொதுவான அனைவரது சிந்தனைக்கும் பொருத்தமானதாக அமைய வேண்டும்.

    எனினும் இந்த இணையத்தளத்தில் கருத்து பதியும் சிலர், இஸ்லாத்தை பாதுகாக்கின்றோம் என்று நினைத்துக் கொண்டு மிகக் குறுகிய வட்டத்துக்குள் இருந்துகொண்டு கருத்து பதிந்து, இஸ்லாத்தை பற்றிய நல்ல எண்ணங்களைக் கூட பாதிப்படைய வைக்கின்றனர்.

    நான் தலைநகரில் பல்வேறு இனத்தவர்கள், மதத்தவர்கள், அதிலும் குறிப்பாக தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் பணியாற்றும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகின்றேன்.

    ஜப்னா முஸ்லிம் தடை செய்யப்பட காலத்தில் இருந்து இந்த இணையத்தளம் எனது நிறுவன பணியாளர்கள் மத்தியில் பார்க்கப்படும் ஒரு இணையத்தளமாக இருந்து வருகின்றது.

    இந்நிலையில், நிலவன் மக்ஸ் போன்ற சிலர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்கின்றோம் என்கின்ற போர்வையில் நம்மவர்கள் சிலர் பதியும் கருத்துக்கள் எதிர்மறையான விளைவுகளையே உண்டாக்குகின்றன என்பதை நிதர்சனமாக உணர்கின்றேன். எனது சக பணியாளர்களின் கருத்துக்களில் இருந்து இதனை தெளிவாக உணர முடியுமாக உள்ளது.

    ஒரு விடயத்தில் பதில் தெரியாவிட்டால், சரியான பதிலை உண்மையாகவே தெரிந்த ஒருவரிடம் கேட்டு பதிவதே சரியாகும், அதனை விடுத்து கேள்வி கேட்டவரை டார்கெட் பண்ணுவது, அவரை குறிவைத்து தாக்கி மட்டம் தட்ட முயல்வது மிகவும் அநாகரீகமானது. ஏனெனில் பலபேர் இங்கே என்ன நடக்கின்றது என்பதை அவதானிக்கின்றனர் என்பதனை மறந்து விடக் கூடாது.

    இஸ்லாம் உட்பட எல்லா மதங்களும், அரசியல் கட்சிகள், கொள்கைகள் போன்று பொது விடயங்கள் ஆகும், ஆகவே விமர்சனங்கள், கேள்விகள் எழுவது நியாயமே. அவற்றை நியாயமாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர, அநாகரீகமாக எதிர்கொள்ளக் கூடாது, ஏனெனில் இஸ்லாம் என்பது இறைவனின் இறுதி வேதம் ஆகும். இறைவனின் இறுதி வேதம், ஒரு சிலரின் அநாகரீகமான பதில்களால் பிழையாக சித்தரிக்கப் படுவதை மெளனமாக பார்த்துக்கொண்டு இருப்பது, பாவத்திற்கு துணை போவது போன்றதாகும்.

    நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நபி அவர்களிடம் யூதர்கள், கிறிஸ்தவர்கள் பல்வேறு சிக்கலான கேள்விகளை கேட்டு இருக்கின்றனர், நபி (ஸல்) அவர்களும் அவற்றிற்கு பதில் சொல்லி இருக்கின்றார்களே தவிர, கேள்வி கேட்டவரை மட்டம் தட்டி அனுப்ப முயலவில்லை. பதில் தெரியாத பொழுது பிறகு வாருங்கள் என்று அனுப்பி, வஹி வந்த பின்னர், அதற்கான பதிலை வழங்கி இருக்கின்றார்கள். இது தொடர்பான ஹதீஸ்களை உலமாக்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

    ஆகவே, ஜப்னா முஸ்லிம் இல் கருத்து, பதில் எழுதுகின்ற சகோதரர்களை கண்ணியமாகவும், நாகரீகமாகவும் நடந்து கொள்ளுங்கள் என்று சகோதர உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

    கேள்வி கேட்கும் உரிமையை மறுக்காதீர்கள், அப்படி மறுப்பது இஸ்லாம் காட்டித் தந்த வழிமுறை அல்ல.

    அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழியை காட்டுவானாக.

    ReplyDelete
  11. Br. AmeerUmad. very nice instructions. Only to note that as you mentioned Islam is the last religion, This is wrong. so what is first religion? Islam is the only religion from 1st to last. But you can say Quran is the final Book of Allah & Prophet Muhammad (Sal) is the last prophet.Jazakallahu Khair.

    ReplyDelete
  12. அமீர் கூறியுள்ளது முற்றிலும் உண்மை.

    முஸ்தபா ஜவ்பர், வொயிஸ் போன்ற பெயர்களில் கோமாளித்தனம் பண்ணுகின்றவர்கள் சிந்திக்க வேண்டும்.

    ReplyDelete
  13. I need a source for 1st para

    ReplyDelete
  14. I just read this page! Since It was regarding the id issue I didn't read but the number of comments made me to click this heading.
    @ Abdur Raheem I don't want to comment about Mustafa and his approach!
    You wouldn't have said this had you followed Nilavan Marx And his comments. And I strongly believe I didn't insult him rather I tackle him from the same weapon ( மனிதநேயம் & சமத்துவம் ) he use to insult Islam.
    I have asked many cross questions from him. He hasn't replied to any of those or he will say you have written too much so I didn't read it.
    He always say Jaffna Muslim don't publish his comments then how come they publish his comments where he says they don't publish? JM would have stopped that Too right?
    If you don't know who is just do a simple search in Google. Make sure you search in Tamil. You will know who he really is.

    ReplyDelete

Powered by Blogger.