Header Ads



ரஷ்யாவின் ஆத்திரமூட்டும், செயலை கண்டிக்கிறது துருக்கி (படம்)

துருக்கி கடல் பகுதியின் ஊடே செல்லும் ரஷ்ய கப்பலில் இருந்த அந்நாட்டு இராணுவ வீரர் வேண்டும் என்றே கப்பலில் இருக்கும் ரொக்கெட் லோஞ்சரை பற்றிப்பிடித்துக் கொண்டிருந்தது குறித்து துருக்கி கடும் கோபத்தை வெளியிட்டுள்ளது.

இது ஒரு ‘ஆத்திரமூட்டும்’ செயல் என்று துருக்கி வெளியுறவு அமைச்சர் மவ்லுத் கவுசொக்லு குறிப்பிட்டுள்ளார். துருக்கி ஊடகத்தில் வெளியாகி இருக்கும் புகைப்படத்தில் ரஷ்ய வீரர் ஒருவர் ரொக்கெட் லோஞ்சரை தனது தோளில் சுமந்து தாக்குதலுக்கு தயாராவது போல் காட்சியளிக்கிறார்.

தனது வான்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சாட்டி ரஷ்ய போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியது தொடக்கம் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்ற சூழல் நீடித்து வருகிறது.

இந்த சம்பவத்தின்போது ரஷ்ய விமானி ஒருவர் கொல்லப்பட்டதோடு, ஆத்திரமடைந்த ரஷ்யா, துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தது.

இதில் பொஸ்பரஸ் நீரிணை ஊடாக பயணித்த ரஷ்ய கப்பலில் இருந்த வீரரே இவ்வாறு செயற்பட்டுள்ளார். முதலாவது உலகப் போர் காலத்து ஒப்பந்தத்திற்கு அமைய ஸ்தன்பூல் நகரை கடந்து செல்லும் இந்த நீரிணை ஊடாக அனைத்து கப்பல்களுக்கும் பயணிக்க அனுமதி அளிப்பதற்கு துருக்கி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. 


No comments

Powered by Blogger.